பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

211

எவ்வளாவு எளிதாக வேஷம் போட்டு ஏமாற்றிப் பெரிய ஆளாக வளர முடிகிறது என்று பார்த்தாயா?”

பெண்ணுக்குப் பொறுப்பு அதிகம்; கட்டுப்பாடுகளும் அதிகம் என்றால், ஆணுக்கு மட்டும் பொறுப்பு கொஞ்சமா? தன்னுள் எழும் விலங்கியல் உணர்வுகளுக்காகத்தான் ஒரு ஒரு ஆண் பெண்ணை மதிக்கிறான். அந்த உணர்வு தனக்கு ஒரு பொறுப்பு கடனைச் சுமத்தும் வகையில் விளைவு தரும் பாது, எத்தகைய அறிவாளியும் முதிர்ந்த பண்பாடு உடையவனும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். இது இன்றைய நிகழ்ச்சி மட்டுமில்லை. பண்டைய காலப் புராண முனிவர்களிலிருந்து தொடர்ந்து வரும் வரலாறுதான் இல்லையா?

“எனக்கு அந்த இல்லத்துப் பெண்களிடத்தில் இந்தக் காணத்தினாலேயே அநுதாபமும் பரிவும்பெருகுகின்றன. மீது அநுதாபமும் அன்பும் பிறந்ததற்கும் அதுதான் காணம். அந்தத் தனி ஒட்டுக் குடிசையில், வெறும் துணி யால் மறைக்கப்பட்ட ஜன்னலுக்குப் பின் நின்றோ, நன்றாகச் சாத்தியிராத கதவிடுக்கு வழியாகவோ பார்த்துக்கொண்டு நீ நிற்பாய் . விரல் வழியே ஒளிரும் விளக்கின் பிழம்புபோல் உன் முகம் என் நினைவை விட்டகலவில்லை. நீ மாடு மேய்க்கும் சிறுமியுடன் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தாய்; எங்களைக் கண்டதும் உள்ளே சரக்கென்று தலையை இழுத்துக் கொண்டாய். உன் தோற்றமே நீ இயல்பாக இல்லை என்று காட்டிக் கொடுத்தது. அன்று அந்த ஒட்டல்காரரிடம் நான் எதோ சாதாரணமாக விசாரிப்பதுபோல் கேட்டேன்...”

மைத்ரேயிக்கு இதழ்கள் துடிக்கின்றன. “சினிமாவில் பாட்டெழுதறேன்னு சொல்லும் ஒரு தி.மு.க. பையனை நம்பி வீட்டைவிட்டு ஓடி வந்திருக்கு போலிருக்கு. பார்த்தால் நல்ல இடத்துப் பொண்ணுபோல இருக்கு...”

“அவ்வளவுதான் சொன்னாரா, ஸிஸ்டர் ?” “அவர் வேறென்ன பேசினாரென்பதை எல்லாம் அப்ப நான் குறிப்பாகக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/213&oldid=1101259" இலிருந்து மீள்விக்கப்பட்டது