பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

ரோஜா இதழ்கள்

ராத்திரி இங்கே தனியாக நான் படுக்கையில் தூக்கம் பிடிக்காமல் விழிக்கும் போது, கதவை ஒருக்களித்துக் கொண்டு, குத்து விளக்குச் சுடர் போல நீ நின்றது மனசில் தோன்றும். அடுத்த வாரம் அங்கே சென்றபோது வீடு பூட்டிக்கிடந்தது. முன்பு நான் பார்த்திருந்த ஆடு மேய்க்கும் சிறுமி அங்கே நின்றாள். உன்னைப் பற்றி விசாரித்தேன், “அந்த அக்காவா? காரில் ஊருக்குப் போயிட்டாங்க..” என்று சொன்னா. உடனே ஒரு மாசத்துக்குள் உன்னை அந்த விடுதியில் பார்க்கத் தூக்கி வாரிப் போட்டது.”

மைத்ரேயி நெஞ்சத்து நெகிழ்வுக்குத் தடைபோட இயலாமல் கீழே கோலமிடுகிறாள். நீர் முத்துக்கள் சிந்துகின்றன.

“எனக்குக் கண்ணீர் விடுபவர்களைக் கண்டால் பிடிக்காது. கண்ணிர் விடுவதனால் பெண் கையாலாகாதவள் என்ற தகுதியை உறுதியாக்கிக் கொள்கிறாள். கண்ணீரை வைத்து ‘ஜோக்'குகள் வெளியிடும் பத்திரிகையை நான் கிழித்துக்கூட எறிந்திருக்கிறேன்.”

மைத்ரேயி பரபரப்பாக கண்களை ஒத்திக் கொள்கிறாள். சிவந்த முகம் மழையில் நனைந்த மலர்போல் ஒளிர, புன்னகை செய்கிறாள்.

“என்னிடம் வந்த பிறகு நீ கண்ணீர் விடுவதை நிறுத்தி, மறந்து போய்விட வேண்டும். உன்னைப்போல் எத்தனையோ பெண்கள் அழுபவர்களாக இருக்கும். என் தம்பி, கல்கத்தாவில் ஒரு காபரே ஓட்டலுக்குப் போய்விட்டு வந்து சொன்னான். அந்தப் பெண் விழித்துப் பார்த்துக்கொண்டு ஒவ்வொரு துணியாக உரிந்து வீசும்போது கூட்டத்திலிருக்கும் பேய்களைப் பார்த்து ஒரு பெண்ணுடம்புக்குக் கழுகுகள் போல் வந்து உட்கார்ந்திருக்கும் பதர்களே, பாருங்கள்! பாருங்கள்! என்று வெறுப்புடனும் ஆக்ரோஷத்துடனும் கூறினாற் போலிருந்ததாம். அவள் ஆடிய ஆட்டம், கூட்டுக் குள்ளே சிக்கிய பாம்பு, கூண்டை ஓங்கி ஓங்கி அறைந்து கொத்துவதைப் போலிருந்ததாம். அங்கே உட்கார்ந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/214&oldid=1123744" இலிருந்து மீள்விக்கப்பட்டது