பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

213

ருந்தவர்கள் கனமுதனவான்கள். கலை இலக்கிய உலகின் பிரமுகர்கள் அக்கா!’ என்றான். எனக்கு அந்தக் காட்சியைக் கண்முன் கண்டாற்போல் நெஞ்சு கொதித்தது. இந்த ஊரிலும் கூட அத்தகைய இரவுக் காட்சிப் படங்களைக் கொட்ட கைக்கு வரவழைத்து வெளியில் பெரிய பெரிய விளம்பரங்கள் வைத்திருந்தார்கள். நான் பத்துப் பெண்களைக் கூட்டிச் சென்று மறியல் செய்தேன். பெண்ணின் தன்மானத்தைக் காலடியில் வைத்துத் தேய்க்கும் அந்தப் பெரிய விளம்பரங்களில் ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று எழுதி ஒட்டினோம். எங்களைப் போலீஸ் வந்து அப்புறப்படுத்திவிட்டு கனதனவான்களை, பெரிய மனிதர்களை, பிஞ்சுகுஞ்சுகளை, பெண்டிரை, எல்லாரையும் உள்ளே படம் பார்க்க அனுமதித்தது. ‘அடல்ட்ஸ் ஒன்லி’ கதைகளாக வெளியிடும் குடும்ப, வாஸ்ய, இலக்கியப் பத்திரிகை ஆசிரியர் அடல்ட்ஸ் ஒன்லி’ எழுத்தாளரைவிட்டு நாட்டுப்புறத்துப் பெண்கள் ரவிக்கை போடுகிறார்களா, கோயில் சிலைகளை அச்சடித்த காகிதத் தால் மூடப்போகட்டுமே சகோதரியார் ! ஆபாசம் அவர் கண்களில் இருக்கிறது. இரகசியங்களை மூடி மறைக்காமல் வெளியிடுவது உண்மையான கலை என்று நீண்ட கட்டுரைத் தொடர் எழுதச் சொன்னார். இங்கே என்னைப் பிராஜக்ட் ஆபீசர் கூப்பிட்டு விசாரணை செய்வது போல் விவரம் கேட்டார். எனக்கு ஒவ்வொரு சமயமும் கண்ணீர் வருவது போல் இருக்கும்; விழுங்கிக்கொண்டு சிரிப்பேன். அந்தச் சிரிப்பும் காபரே ஆட்டக்காரியின் சிரிப்பைப் போன்றது தான்...”

“அக்கா, சமூக சேவை செய்யும் நர்மதா, மிஸஸ் சிவநேசன் இவர்களை எல்லாம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?”

“அவர்களுக்காக வருத்தப்படுகிறேன். பணம். பணத்துக்காக இன்று எதையும் யாரும் கறைபடுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. அவர்களுக்கு சமூக சேவை என்ற பெயரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/215&oldid=1101263" இலிருந்து மீள்விக்கப்பட்டது