பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13

ழை பெய்து ஒய்ந்துவிட்டதை நினைப்பூட்டுவதுபோல் ஈசலாக மொய்க்கின்றன. குழல்விளக்கின் அடியில் குடி யிருக்கும் இரு பல்லிகள் ஓடி ஓடி வேட்டையாடுகின்றன. எத்தனை பெரிய பல்லிகள் ! கள்ளச் சந்தைக்காரனை நினைப்பூட்டும் பல்லிகள். மக்களும் ஒருவகையில் ஈசல்களைப் போலவே குழல் விளக்குக் கவர்ச்சிகளில் வீழ்கிறார்கள் என்றால் பொருந்தும்.

விளக்கடியில் அவள் விரித்துவைத்திருக்கும் காகிதங்களில் ஈசல்கள். தட்டெழுத்துப் பொறியிலும் கைகளிலும் கூடச் சிறகுகளை இழந்த ஈசல் பூச்சிகள் ஊர்கின்றன.

பட்டென்று விளக்கை அணைத்து விடுகிறாள் ஞானம். ரேடியம் பூச்சு கடியாரம் மணி எட்டரை என்று காட்டுகிறது.

மைத்ரேயி கல்லூரியில் ஏதோ கூட்டம் என்று காலையில் மொழிந்தது, நினைவுக்கு வருகிறது. ரூபாய் மதிப்புக் குறைவைப் பற்றிக் கருத்தரங்கு என்று கூறினாள்.

வாயிலில் வந்து வராந்தா விளக்கையும் அணைத்து விட்டு ஞானம் தோட்டத்தில் நிற்கிறாள். தெருவிளக்கின் பிழம்பை சுற்றி ஈசல்கள் பறக்கின்றன. ஈரமண்ணில் படிந்து வரும் காற்று தலைப்பை இழுத்து மூடிக்கொள்ளச் செய்கிறது. கார்த்திகை மாசத்துப் பொறிகளைப்போல் நெடுகத் தெரியும் சாலை விளக்குகளும் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கின்றன. எதிர்ச்சாரியில் டாக்டர் ராமசேஷனின் மனைவி வராந்தாவில் உள்ளே தள்ளி வைத்திருக்கும் அகல் ஒளி முத்துச்சுடராய் விளங்குகிறது. ராமசேஷனும் அவர் மனைவியும் அவளோடு நெருங்கிப்பழகும் தம்பதி. ஒராண்டுக்காலம் அமெரிக்காவில் இருந்து வந்ததை அடிக்கொரு முறை நினைப்பூட்டும் வண்ணம் செயற்கையாகத்தோளைக் குலுக்கிக் கொள்வதும், சில சொற்களை நாவைச் சுழற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/217&oldid=1100073" இலிருந்து மீள்விக்கப்பட்டது