பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

217

தென்னிந்திய அந்தணர் மரபில் வந்த ஜானகி மட்டும் தான் இத்தகையவள் என்பதில்லை. ஞானம், காமத்கள், ஹெக்டெக்கள் என்று பல கலவை மொழி மக்களையும் பார்க்கிறாள். சங்கர்காமத், ராமசேஷனைப் போன்றவன் தான். ஆனால் அவன் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட மனைவி குஸ்-மாவோ, அவனுடைய தந்தையின் சிரார்த்தத்துக்கு எங்கெல்லாமோ அலைந்து புரோகிதரையும் பிராமணரையும் தருவித்துச் சாமான்கள் சேகரித்து, ஏற்பாடு செய்தாள். புரோகிதரே. எல்லாவற்றையும் அவனுக்காகச் செய்தாலும், பித்ருக்களுக்கு வழிபாடு செய்யும் நேரத்துக்கு அந்த (ப்பிரமாத) அலுவலகத்திலிருந்து அவன் சுங்கானும் வாயுமாக வந்தான். பிறகு நீராடி வேட்டியைக் கச்சமிட்டு அணிந்து கொண்டு அங்கே சாட்சிக்கு நின்றான். ஞானம் இது குறித்து அவனிடம் விசாரிக்காமலில்லை. “நம்பிக்கை இல்லை, இருக்கு அதெல்லாம் இல்லை பஹன்ஜி, இப்போது எங்களுக்குத் தனித்தன்மையே கிடையாது. அவள் சொல்கிறாள். நடக்கறேன்” என்று சிரித்தான். குஸ-மாவோ சிரித்துக்கொண்டு, “நாங்கள் க்ருஷணிகள் பஹான்ஜி. அவர்களுக்கு என்று இல்லற தர்மத்தின் பொறுப்பு தனியாகக் கிடையாது. நாங்கள் புண்ணியம் செய்தால் அவர்களுக்குப் போதும். நாம்தான் தர்மத்தை விடக்கூடாது” என்று கூறுகிறாள்.

திருமதி கோகலே, இவர்களெல்லாரையும்விட ஒருபடி மேலானவள். கணவனுக்கு மாமிசம் உண்டு பழக்கமாகி விட்டது. அவளே நல்ல மாமிசமாக வாங்கி வந்து சமைத்துப் போடுகிறாள். ஆனால் அவளோ, கடும் நியமக்காரி. ஆவணி சோமவாரம் என்றால் எந்தத் தானிய உணவும் அருந்தாமல் விரதம் இருக்கிறாள். அவளுடைய தோட்டத்திற்கு வந்து அருகம்புல்லும் மந்தார இலையும் கொண்டுபோய் கண நாதனை வழிபடுகிறாள். பெண்கள் வேரைக் கெல்லி ஏறிவது சமுதாயத்தின் ஆணிவேரையே கெல்லி எறிவதற்கொப்பாகும் என்று இந்தப் பெண்கள் கருதிச் செயல்படுகிறார்கள் என்பது கூடச் சரியில்லை. அது இயற்கையாகவே இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/219&oldid=1100077" இலிருந்து மீள்விக்கப்பட்டது