பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

ரோஜா இதழ்கள்

“என்ன ஸிஸ்டர், இருட்டில் உட்கார்ந்திருக்கிறீர்களே?” ஜானகிதான் வாசலில் வந்து நிற்கிறாள். “ஜானகியா? வாம்மா, ரிபோர்ட் தயாரிக்கலாம்னு உட்கார்ந்தேன். ஒரே ஈசல், விளக்கை அணைச்சிட்டு வெளியே வந்தேன். ராமசேஷன் இல்லை ?”

“அவருக்கு ஒரு ஃபரண்டு, வந்திருக்கிறார். சர்வீஸ் டாக்டர். பாகிஸ்தான் வார் முடிஞ்சப்புறம் இப்பத்தான் இங்கே பெங்களூருக்கு மாற்றல்னு வந்திருக்கிறாராம். இரண்டு பேருமாக ஸிடிக்குப் போயிருக்கிறார்கள். சிவு தூங்கிப் போயிட்டான். மைத்ரேயி இல்லே? இன்னும் காலேஜ்லேந்து வரலே ?”

“இன்னிக்கு ஏதோ மீட்டிங்னு சொன்னா. வரத்துக்கு நேரமாயிடுத்து...”

“எம்.ஏ. முடிச்சிட்டு என்ன பண்ணப்போறா ஸிஸ்டர், அவ ?”

“கிளாஸெடுக்கணும்னு விழுந்து விழுந்து படிக்கிறாள். ரிஸர்ச் பண்ணப் போறேன்னு சொல்லிண்டிருக்கா. இப்ப எதுவும் சொல்வதற்கில்லை. ரிஸர்ச் அது இதுன்னு பண்ணி என்ன பலன் குதிக்கப் போகிறது? இப்போது நான் என்ன பண்ணிண்டிருக்கிறேன் ? ஈசல் வந்து ரிபோர்ட்டில் அப்புகிறதுனு வெளியே வந்து உட்கார்ந்திருக்கிறேன். பெண், படித்துவிட்டால் எல்லாச் சிறுமைகளும் போய்விடும், பொருளாதார சமத்துவம் வந்துவிடும் என்று நினைத்தோம். ஆனால் எவ்வளவு படித்தும் அந்தப் படிப்பெல்லாம் கொஞ்சமும் தேவைப்படாத இன்னொரு புறம்தான் நாம் வாழ வேண்டியிருக்கிறது. அந்த வாழ்க்கையையும் பணம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது...”

“உண்மைதான் ஸிஸ்டர், என் தங்கைக்குப் போன வருஷம் கல்யாணமாச்சு. என்னைவிட அவள் ஒன்னரை வயசுதான் சிறியவள். அவள் எம்.எஸ்ஸி(ஹோம்சயன்ஸ்). அவன் இன்ஜினியரிங் டிப்ளமா வாங்கி ஜூனியர் இன்ஜினியராகத்தானிருக்கிறான். வரதட்சிணை அஞ்சாயிரம். கல்யாணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/220&oldid=1101273" இலிருந்து மீள்விக்கப்பட்டது