பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

219

இருபதாயிரத்துக்கு மேலே ஒடிவிட்டது. இப்போது போன மாசம் இவர் டில்லிக்குப் போயிருந்தப்ப, எங்கம்மா வளையல் அடுக்கக் கூட்டிவரச் சொல்லி அனுப்பியிருந்தாள். இவரைக் கண்டதும் அந்தம்மா, அந்தச் சீர்செய்யலே, இந்தச் சீர் செய்யலே, வருஷாந்தரச் சீருக்கு காட்ரெஜ் பீரோ வாங்கி அனுப்பறேன்னு சொல்லி ஏமாத்திட்டா. வளைகாப்புன்னு இப்படி அனுப்ப முடியுமா, வந்து எல்லாம் செய்து வகையாகக் கூப்பிடவந்தால்தான் அனுப்புவோம் என்றெல்லாம் சொன்னாளாம். தீபாவளிக்கு மாப்பிள்ளைக்கு வயிர மாதிரம் போடவேண்டும் என்றாளாம். இதற்கெல்லாம் எங்க வீட்டில் இவரைக் கோயிலில் வச்சுக் கும்பிடணும், இந்த பிராமண சாதியே இப்ப ரொம்ப மோசமாயிட்டது, விஸ்டர் !”

ஞானம் உள்ளுறச் சிரித்துக் கொள்கிறாள் . பிராமண சாதி இப்படி இழிந்து போனதால்தான் இந்த ஸிஸ்டர் முடி நரைத்துப் போய்க் கல்யாணமாகாமல் வறட்டுக் காலட் சேபம் செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறாள்.

“இந்த மாதிரியெல்லாம் கேட்பதனால்தான் நம் பெண்கள் தங்கள் மேன்மையை எல்லாம் மறந்து, வேற்று சாதியில் சம்பந்தம் செய்துகொள்ளத் தயங்குவதில்லை. இப்போது ரொம்ப நடக்கிறது. ஸிஸ்டர்! கொஞ்ச நாளைக்கு பெரியவர்கள் முறுக்கிக் கொள்வார்கள். பிறகு, சகஜமாகப் போகிறது.” என்று விவரிக்கிறாள் ஜானகி.

“ஒரளவு படித்து மறுமலர்ச்சி பெற்று, நன்றாக வாழ வேண்டும் என்று முன்னுக்கு வந்தவர்கள் வெறும் உயர்குலப் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு கீழ்முகமாகப் போகிறவர்களைவிட மேல்தான்.”

“நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் ஸிஸ்டர்? கீழ்முகமாகப் போகிறதென்றால் எதைச் சொல்கிறீர்கள் ?”

ஞானம் புன்னகை செய்கிறாள். “இதெல்லாந்தான். ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு அகாத விலை கேட்பது. அவளுடைய கல்வியையோ திறமையையோ மதிக்காமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/221&oldid=1100090" இலிருந்து மீள்விக்கப்பட்டது