பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

ரோஜா இதழ்கள்

வெறும் சீர் செய் நேர்த்திகளில் எடைபோடுவது, எல்லாந்தான். நான் மது மாமிசம் கொள்பவர்களைப் பற்றிப் பேசவில்லை. உண்மைக்குப் புறம்பாகத் துரோகம் செய்து கொண்டே பாசாங்கு செய்தல், சுயநலத்துக்காக எதை வேண்டுமானாலும் இழத்தல், எல்லாம் தான்.”

ஜானகி ஞானத்தின் பெருந்தன்மையைப் புரிந்து கொண்டு முகமலருகிறாள்.

“நாலு வர்ணம் என்பது தோற்றத்தையோ, வாழ்க்கை முறையையோ குறிப்பதல்ல. அது அக இயல்பையும் சார்ந்து தானிருக்கிறது. அதன்படி பிரும்ம குலத்தில் பிறந்தும் தன் சிறுசிறு ஆதாயங்களுக்காக ஒரு மேலதிகாரியின் எந்த ஈனமான தேவையையும் நிறைவேற்ற முயன்றால் அவன் கடையவன்தான். தாழ்ந்த படியில் தோன்றியும் பெருந் தன்மையுடன் நடந்து கொண்டால் அவன் அந்தணனுக்குரிய படிக்கு உரியவனாகிறான் இல்லையா?” என்று கேட்கிறாள் அவள.

ஒரு சராசரி அறிவு வாய்ந்த குடும்பப் பெண் என்று நினைத்துப் பார்க்கையில் அவளுடைய அறிவு முதிர்ச்சி பெருமைக்குரியதாகவே இருப்பதாக ஞானம் வியந்து கொள்கிறாள். அப்போது ஒசைப்படாமல் ஒரு பெரிய கார் ஞானத்தின் வீட்டுக்கு முன்பாக வந்து நிற்கிறது. ஜானகி மெள்ள நழுவிச் செல்கிறாள்.

கார்க் கதவை ஒட்டி திறந்து ராஜா இறங்கு முன் மைத்ரேயி மறு பக்கமாக இறங்கிவிடுகிறாள்.

ஞானம் சட்டென்று விளக்குகளைப் போட்டுவிட்டு, “வாருங்கள், வாருங்கள்!” என்று வரவேற்கிறாள்.

மேசையின்மீது இரண்டொரு இறக்கையற்ற ஈசல்கள் ஊர்ந்துகொண்டு இருக்கின்றன. ஞானம் காகிதங்களைத் தட்டி வைத்து, தட்டெழுத்துப் பொறியை ஒரமாக வைத்து மூடுகிறாள்.

“உட்காருங்கள்!” என்று பிரம்பு நாற்காலியைக் காட்டி உபசரிக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/222&oldid=1101274" இலிருந்து மீள்விக்கப்பட்டது