பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

221

ராஜாவின் முகத்தில் முதுமையைக் காட்டும் சுருக்கங்கள் தெரிகின்றன. பாதித்தலை வழுக்கை. இரு காதோரங்களில் மட்டும் நரைத்து மேலே செல்லச் செல்ல அடர்த்தியில்லாத கருமை எஞ்சியிருக்கிறது. கூர்ந்து நோக்கினால் ஓர் அயர்வு தெரியும் முகம்; தங்கப் பிரேம் மூக்குக்கண்ணாடி, தடித்த ‘ஷெல்பிரேம்’ கண்ணாடியாக மாறியிருக்கிறது.

“ரொம்ப நாளாச்சு பார்த்து, எப்படி இருக்கு பிராஜக் டெல்லாம் ?”

ஞானம் அலட்சியமாகச் சிரித்தவண்ணம் கூறுகிறாள். “எப்படி இருக்கும்? எத்தனையோ பொதுத் திட்டங்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படி...”

“பொடி வைக்கிறீர்கள். எத்தனையோ பொதுத் திட்டங்களென்றால், எதைக் குறிப்பிடுகிறீர்கள்னு தெரியலியே ?”

“எதைக் குறிப்பிடுவேனென்று எதிர்பார்க்கிறீர்கள்? சுய நலம் என்ற ஒன்றை வெல்லும் அளவுக்கு நம் மக்களுக்கு இன்னமும் நாட்டுப்பற்று என்பது இருக்கிறதா என்பதைத் தான் அப்படிக் குறிப்பிடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!...”

“நாம் நூற்றைம்பது ஆண்டு காலம் அடிமையாகக் கிடந்தவர்கள், மிஸ் ஞானம். அந்தவடு ஆண்டாண்டாக மனப்பாங்கில் பதிந்திருக்கிறது. ரயில் வண்டியிலிருந்து விசிறியையும் விசையையும் திருடுபவனுக்கு இன்னமும் நம் சொத்தைக் கொள்ளையிடுகிறோம் என்று தெரியவில்லை. ஆத்திரப்பட்டுப் பஸ்ஸைக் கொளுத்தும் இளைஞரும் அதை உணருவதில்லை.” என்று நியாயம் பேசுகிறார் ராஜா.

“அதுசரி; இந்தப் பத்துப் பதினைந்து வருஷத்தில் கண் விழித்தவர்களுக்கும் அது ஏன் வரவில்லை ? அவர்கள் சுதந்திர நாட்டில் இருப்பவர்களாயிற்றே? ஏனெனில் தங்கள் தலைவர்களின் சொற்களுக்கும் உண்மைக்கும் வேற்றுமை இருப்பதை இளம் தலைமுறையினர் உணர்ந்து விட்டார்கள். காந்தி ஜயந்தியன்று கைராட்டையுடன் பத்திரிகைக்குப் படம் எடுக்கப் போஸ் கொடுத்துவிட்டு, மாலையில் பார்ட்டியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/223&oldid=1101275" இலிருந்து மீள்விக்கப்பட்டது