பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

ரோஜா இதழ்கள்

பங்கெடுத்துக் கொண்டு நேர்மாறாக நடக்கும் ஒரு தலைவனால் எந்த நல்ல சமுதாயத்துக்கும் வழிகாட்ட முடியாது. ஒவ்வொரு வியாபாரியும் அரசியல்வாதியும் அறிவாளியும், தொழில்காரனும் பணத்தினாலேயே உருவாகின்றனர்; பிழைக்கின்றனர். இதை அதிகம் விரிப்பதற்கில்லை. ஏனெனில் பேசும் நானும் மனசாட்சிக்குப் புறம்பாகச் சம்பளம் வாங்கிக் கொண்டு இங்கே உட்கார்ந்திருக்கிறேன். அது கிடக்கட்டும், வெகுநாட்கள் கழித்துச் சந்திக்கிறோம். உங்களுக்கு. என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்று கனிவாகவும் மரியாதையாகவும் வினவுகிறாள் ஞானம்.

“எனக்கு ஒன்றும் வேண்டாம்...தாங்க்ஸ்... இப்போது எதுவும் சாப்பிடுவதற்கில்லை.”

“அது தெரியும். என்றாலும் இந்த குளிருக்கு பழ ஜூஸ் ஒன்றும் சரியாக இருக்காது. மைத்ரேயி நன்றாகக் காப்பி போடுவாள்...” என்று மைத்ரேயியைப் பார்க்கிறாள் அவள். மைத்ரேயி நாற்காலியைப் பிடித்துக்கொண்டு உத்தரவுக்காகக் காத்து நிற்பவளைப்போல் நிற்கிறாள். “சரி, உங்கள் விருப்பம். இரவு எனக்குச் சாப்பாடு கிடையாது. காப்பிக்கு மட்டும் எந்த நேரத்திலும் தடையில்லை...”

ராஜாவின் அரும்பான பல் வரிசை தெரிகிறது, தங்கப்பல் பளிச்சிட மைத்ரேயி உள்ளே செல்கிறாள்.

“நான் மைத்ரேயியை முதன் முதலாக லோகாவின் வீட்டில் பார்த்ததும் அவளை அந்த ஹோமில் விடக்கூடாது என்று சொன்னேன். என் கருத்து அன்றே அவளுடைய எதிர்காலத்தை உருவாக்கிவிட்டது. என் புள்ளி தவறவில்லை. இன்று மாணவர் பங்கெடுக்கும் கருத்தரங்காகவே அது இல்லை. மைத்ரேயியின் பேப்பர் பொருளாதார நிபுணர்களையே கவருவதாக அமைந்திருந்தது. இளைஞர்மன்ற காந்தி ஜயந்தியின் போதும் நன்றாகப் பேசினாள். ஒரு நல்ல பேச்சாளி நமக்குக் கிடைக்கிறாள் என்று லோகா சொன்னாள். நான் அன்று சொல்லவில்லை. இந்தக் கருத்தரங்குக்குத் தலைமை தாங்க அவள் கூப்பிட்டதும் உடனே ஒப்புக்கொண்டேன். நம் நாட்டில் இப்போது ஒரு சாபக்கேடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/224&oldid=1100098" இலிருந்து மீள்விக்கப்பட்டது