பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

223

என்னவென்றால் அறிவாளிகள் அரசியலை விட்டு ஒதுங்கிப் போக, அரசியலில் மூன்றாந்தரங்கள் வந்து தலையெடுத்துக் குழப்புகிறார்கள்:”

ஞானம் விடுவிடென்று, “இன்னொருமுறை சொல்லுங்கள் நான் திருத்துகிறேன். அறிவாளிகளுக்கு அது மேசை கழுவிய அழுக்கு நீராக இருக்கிறது. எத்தனை தடவை வடிகட்டினாலும் அது தெளிந்த நீராக மாறுவதில்லை. மாறாக, அந்த அழுக்கில் அவர்களும் முழுக்காடுவதுதான் நடக்கிறது.”

‘அழுக்கு நீர் அழுக்கு நீரென்று ஒதுக்கிவிட்டால் அழுக்கு நீரை மேலும் அழுக்காக்கும் மனிதர்கள் அல்லவோ வந்து பற்றிக் கொள்கிறார்கள்? அழுக்கு மேலே ஒட்டிக் கொள்ளுமே என்று அஞ்சி ஒதுங்குவது சமுதாயத்துக்கு அவர்கள் நல்லது செய்வதாகாது. இப்போது காங்கிரஸ் பழைய மாதிரி இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.”

ஞானம் பேசவில்லை. தரையைப் பார்த்துக்கொண்டு கைக்குள் எதையோ நெருடிக்கொண்டிருக்கிறாள்.

“இப்போது காங்கிரஸ் உங்களுடைய சோஷியலிசக் கொள்கைகளுக்கு விரோதமல்ல. சற்றுமுன் மனசாட்சிக்கு உறுத்தும்படிச் சம்பளம் வாங்குவதாகச் சொன்னிர்கள். உதறி எறிந்து விட்டு வாருங்கள். நீங்கள் பொருட் செலவு குறித்து யோசனை செய்யவேண்டாம். உங்கள் தேச பக்தியை நானறிந்தவன். கட்சிக்கு உங்களைப் போன்றவர்களை ஒதுக்கி வைப்பது பெரிய இழப்பு. நீங்கள் வந்து ஒத்துழையுங்கள்...” என்று வலையை வீசுகிறார் ராஜா.

ஞானம் அமைதியாக நிமிர்ந்து பார்க்கிறாள்.

“நீங்கள் வரும்போதே தேர்தல் விரைவில்வருவதைப் பற்றித்தானே நினைத்தேன்!” என்று அறிவிக்கும் பார்வை அது.

“உங்களுடைய கொள்கை மாற்றத்துக்கு நான் நிச்சயமாக ஆதரவு கொடுக்கிறேன். என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனால் அகற்காக கான் மீண்டும் அரசியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/225&oldid=1101276" இலிருந்து மீள்விக்கப்பட்டது