பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

ரோஜா இதழ்கள்

மேடைக்கு வரப்போவதில்லை. ஆம், நிச்சயமாக நான் வரப் போவதில்லை.”

“நீங்கள் ஒரு முறை ஏற்பட்ட கசப்பான அநுபவத்தில் பேசுகிறீர்கள். இம்முறை உங்கள் வெற்றி நிச்சயம். நீங்கள் பார்லிமெண்டுக்கு நிற்கவேண்டும் என்பது என் கோரிக்கை. உங்கள் விருப்பம் மாநிலமானால் மந்திரிப் பதவி நிச்சயம்...”

“எனக்கு அப்பத்துண்டு காட்டி வலையில் இழுக்கலாம் என்று பார்க்கிறீர்களா..?” என்று ஞானம் கேலியாகச் சிரிக்கையில் மைத்ரேயி காப்பியைக்கொண்டு வருகிறாள்.

ராஜா பச்சைக்கல் மோதிரம் மின்னும் விரல்களை நீட்டிக் காப்பிக் கிண்ணத்தை எடுத்துக் கொள்கிறார்.

“மைத்ரேயி எம்.ஏ.முடிச்சிட்டு என்ன செய்யப் போகுது?”

மைத்ரேயி நாணம் கவிய ஒதுங்கி நிற்கிறாள்.

ஒர்கணம் சென்றதும், “ரிஸர்ச் பண்ணுவதாக இருக்கிறேன். ஸார்” என்று கூறுகிறாள்.

“என்ன ரிஸர்ச் ?”

ஞானம் உடனே, “அதைக் கேளுங்கள், பைத்தியக்காரி. ஆரியர்- திராவிடர் வரலாறு பற்றிய ரிஸர்ச்சாம். திராவிடர்களை ஒரு காலத்து ஆரியர்கள் துரத்தியதால்தான் இன்று திராவிடர் ஆரியர்களைத் துரத்துகிறார்களாம். இவள் ரிஸர்ச் செய்து ஆரியர்கள் மேலுள்ள கறையை நீக்கப் போகிறாளாம். இதைச் சொன்னாலே உன்னை யுனிவர்ஸிடியில் நுழைய முடியாமல் துரத்திவிடுவார்கள். இந்த அசட்டு ஆராய்ச்சிகளினால் கூனலை நிமிர்த்த முடியுமா? யாருக்கு என்ன இலாபம்? நான் பொறுப்பில் இருந்தால் இந்த மாதிரியான கவைக்குதவாத ஆராய்ச்சிகளில் பொருளே செலவிட வேண்டாம் என்று மூடிவிடச் சொல்வேன்” என்று காரமாக முடிக்கிறாள்.

“நீங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மைதான். ஆராய்ச்சி உண்மை எல்லாம் செயல்முறைக்கு உதவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/226&oldid=1123749" இலிருந்து மீள்விக்கப்பட்டது