பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

225

படியாக இருக்க வேண்டும்..” என்று ஒப்புக்கொள்கிறார் .

“வறட்டுத் தத்துவங்களால் என்ன பயன்? ஏழு வருஷங்களாக இங்கே இந்த'ஓரியன்டேஷன் சென்டர்’ நடக்கிறது. முப்பத்தெட்டு கிராமங்களுக்குக் கோடி கோடியாகத் திட்டச் செலவு ஏறியிருக்கிறது. என்ன வகையில் முன்னேற்றம் கண்டிருக்கிறது? அதனால் என்ன தீமை குறைந்திருக்கிறது? அதுவும் குடும்ப நலத்திட்டம் கீழ்ப்படிகளில் படுதோல்வி. சில வருஷங்களுக்கப்பால் கீழ்ப்படி வர்க்கம் பெருகும்; மேற்படி அருகும். அறிவு மட்டத்தில் வேனுமானால் சோஷியலிசம் சாத்தியமாகும். எல்லாரும் மந்தைமாடாகலாம். பொருளாதார மட்டத்தில் அல்ல.

ராஜா திட்டப் பிரச்னையை ரசிக்கவில்லை.

“மைத்ரேயிக்கு அப்படி என்ன அந்த ஆரியர்திராவிட வரலாற்றில் ஈடுபாடு ?”

மைத்ரேயிக்கு ஞானம், காரணத்தைக் கூறிய பின்னரும் அவர் ஏன் திரும்பக் கேட்கிறார் என்று புரியவில்லை. அவள் மெளனமாகவே நிற்கிறாள்.

“அது இருக்கட்டும். இப்போது அந்த ஆராய்ச்சிக்கு அவசியமில்லை. அவங்கதான் அரசியலுக்கு நோன்னு சொல்லிட்டாங்க. நீ அரசியலுக்கு வரணும். இந்தத் தடவை தேர்தல் காங்கிரஸின் பலத்துக்கு ஒரு சோதனையாக இருக்கு மென்று நினைக்கிறோம். எதிர்ப்பு பல முனையாக இருக்கிறது. இந்தியைத் துருப்புச் சீட்டாக வச்சிட்டு ஆடுறாங்க. இந்த ஆட்டத்தில் நாமும் முழு மூச்சாக வச்சிட்டுத்தான் ஜெயிக்கப் பார்க்கவேணும். இது அறுபத்தாறு நவம்பர்; அறுபத்தேழு பிப்ரவரிக்கு அதிக நாளில்லை. உன் குரல், பேச்சுத்திறன் எடுப்பான தோற்றம் எல்லாமே இந்தக் கட்சிக்குப் பயன்பட வேண்டும். என்னைக் கேட்டால் நீ கல்லூரியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்தக் காலத்தில் விடுதலைப் போராட்டத்துக்கு மாணவர் அரசியலில் குதிக்கவில்லையா? இது அதைவிட முக்கியமான கட்டம். அவர்களும் மாணவர்களைக் கொண்டே போராட்

ரோஇ - 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/227&oldid=1123751" இலிருந்து மீள்விக்கப்பட்டது