பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

ரோஜா இதழ்கள்

டத்தைநடத்தச் செய்கிறார்கள். அவர்கள் கட்சியில் அடுக்கு மொழிப் பந்தலைத் தவிர வேறொன்றும் உருப்படியான கொள்கை கிடையாது. அறிவாளிகளை மூலையில் முடக்கும் அந்தக் கட்சி இந்தக் கோட்டைக்கு ஊறுசெய்ய விடக் கூடாது...”

வேகமாகப் பேசுவதால் ராஜாவுக்கு முகம் சிவக்கிறது. மைத்ரேயி தருமசங்கடமடைந்தாற்போல அவரைப் பார்க்கிறாள். ஞானம் எந்த வகையான இறுக்கத்தையும் உணரவில்லை. அவளுடைய புன்னகையே அதை வெளியிடுகிறது.

ராஜா மீண்டும் ஞானத்தை நோக்கிப் பேசுகிறார். “நான் மைத்ரேயியைக் காங்கிரஸ் கட்சியின் புதிய துளிராக முதலிலேயே நினைத்துவிட்டேன். இம்மாதிரிப் புதிய இரத்தம் பாய இடம் கொடுக்காததனால்தான் இன்று இவ் வளவு பெரிய எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டி இருக்கிறது.” “மிகப் பெரிய எதிர்ப்பா? உண்மையிலேயே கவலை கொடுக்கக் கூடியதுதானா?”

ராஜா ஒரு பக்கமாக முகத்தைச் சுளித்துக்கொண்டு, “சந்தேகமில்லாமல், ஆளும் கட்சி என்ற துணிவு நம்மிடம் இருக்கிறது. ஆனால் சென்னை, சுற்றுப்புறத்தை விட்டால் உள்ளே பட்டி தொட்டிகள் கிராமங்களெல்லாம் அவர்கள் பவர்ஃபுல் மீடியத்தினால் மக்களைக் கவர்ந்து இழுக்கிறார் கள். சிறுசிறு ஊர்களெல்லாம் நரம்பு இழைகள் போல் அவர் களுடைய அமைப்பு பரவி இருக்கிறது. எல்லாவற்றையும் விடக் கவலைக்கு இடம் தருவது இந்த மேற்குலத்தார் சாய்புதான். அந்தக் கிழவர் இவ்வளவுக்குப் போய் நச்சுப் பாம்புகளைத் தோளில் போட்டுக் கொண்டு தடவிப் பால் வார்க்கலாமா?” என்று கேட்கிறார்.

“உங்களைத்தான் அதற்காக இந்தக் கிழவர் தட்டிக் கொடுக்கிறாரே! இந்த ஆட்சியின் சாதனையில் நிர்வாகத் துறையிலும் வேறு பல பிரிவுகளிலும் தலைமைப் பொறுப்பைப் பூணுால் இல்லாதவரே அலங்கரிக்கின்றனர்; குலக் கல்வித் திட்டத்தை முறியடித்து எல்லோருக்கும் ஒரு கல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/228&oldid=1100119" இலிருந்து மீள்விக்கப்பட்டது