பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

227

கொண்டு வந்தீர்கள். கலைக் கல்லூரிகளில், தொழிற் கல்லூரிகளில் அந்த மேற்குலத்தார்வருவதற்கு என்னென்ன முட்டுக்கட்டைகள் உண்டோ அத்தனையும் போட்டீர்கள் என்றெல்லாம் மகிழ்ந்து ஆதரவு தேடிக் கொடுக்கிறாரே? அவருடைய ஆதரவு உங்களுக்கு இருக்கும் வரையிலும் ஓட்டுக்குப் பஞ்சமில்லை; இந்த நீங்கள் அஞ்சும் மேற்குலம் என்ன சதவிகிதம் இருப்பார்கள்? மிகக் குறைவு. உங்கள் கோடடைக்கு ஒரு நாளும் ஆபத்து வர முடியாது. பெரும்பான்மை கொஞ்சம் குறையக்கூடும் வேண்டுமானால்....”

“நீங்கள் சொல்கிறீர்கள் அம்மா. எனக்கு வெளியே பாக்கும் போது, இம்முறை சென்னை எதிர்ப்புக்களைச் சமாளிப்பது சிரமம் என்றே தோன்றுகிறது. பருவமழை வறுவதும் பஞ்சம் வருவதும் ஆட்சியில் எல்லா இடங்களிலும் நடப்பதுதான். ஆனால் இங்கே அரசின் முயற்சிளை விட மக்கள் எதிர்க்கட்சியின் கூச்சலையே பெரிது படுத்துவதாகத் தோன்றுகிறது. காங்கிரஸ் ஆட்சி சென்னையில் மிகப் பெரிய சாதனைகளைச் செய்திருப்பதை யாருமே மறுக்க முடியாது. நீங்கள் வேறு எந்த ராஜ்யத்துக்குச் சென்றாலும் இது கண்களில்படும். போக்குவரத்து, சாலை, மின்சாரம். கல்வி, நிர்வாகம் என்று முன்னணியில் நிற்கும் ராஜ்யம் சென்னை. வெளியே நின்று அடுக்கு மொழியில் குறை கூறுவது எளிது. கையில் பொறுப்பை வைத்திருப்பவர்கள் அடுக்கு மொழியை வைத்துக் கொண்டு மட்டும் ஒன்றும் செய்து விட முடியாது. மக்களை ஏமாற்றலாம். நான் பெரிதும் மதிப்பு வைத்திருந்தேன் அந்தப் பெரியவரிடத்தில். அத்தகைய ‘ஸ்டேட்ஸ்மன்’ இவ்வளவு கீழ்த்தரமாகக் காங்கிரஸைப் பலவீனப்படுத்த அவர்களுடன் சேர்ந்து ‘இன்டலக்சுவல்’ என்ற பிரிவைக் காங்கிரசிலிருந்து இழுக்கிறாரே? அது சரியில்லை. நேருஜி கூறினாற் போல் வயசான பிறகு ஏற்பட்ட கோளாறு இது...நான் இன்று கூறுகிறேன், பிராமண சாதி, தற்கொலைக்கொப்பான செயலைச் செய்வதாக ஆகும். இன்று அவர் பேச்சைச் செவிமடுத்து அவர்களுடன் சேருவது...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/229&oldid=1101278" இலிருந்து மீள்விக்கப்பட்டது