பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

ரோஜா இதழ்கள்

மற்றவர் கேலிக்குரிய வகையில் பார்க்குமளவுக்குப் பாதித்திருக்கிறது. இங்கே ‘ஐயர்’ என்று போட்டுக் கொள்ளவும் கூசவேண்டியிருக்கிறது. “அர் யூ எ பிராமின் ?” என்ற கேள்வியும் “ஆம்” என்று சொல்லிக் கொள்ளவே கூசும் நிலையும் இன்று தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த அளவுக்குச் சராசரி அறிவுக் கூர்மை உள்ள ஓர் வகுப்பு அழுத்துவதைத் தவிர்க்க, அரசு இந்நாள் என்ன செய்திருக்கிறது ?”

மைத்ரேயி இவ்வளவு ஆவேசத்துடன் பேசி ஞானம் கேட்டதில்லை. மூலையிலிருந்த வெறும் காகிதத்துண்டு திடீரென்று வெடி மருந்து சுற்றிய காகிதத்துண்டு என்று தன்னை வெளியிட்டுக் கொள்ளப் பொறிகள் பறக்க வெடித் தாற்போலிருக்கிறது. ராஜா அவளைப் பாராட்டும் வகையில் புன்னகை செய்கிறார். “சபாஷ் மைத்ரேயி, நீ இந்த உணர்வுடன் பேசுவதிலிருந்தே வெற்றியைத் தேடிக் கொடுப்பாய் என்று நிரூபிக்கிறாய். நீ கேட்டதெல்லாம் நியாயம். ஆனால் இன்று அந்த வகுப்பார் எரிகிற சட்டியிலிருந்து அடுப்புக்குள் குதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கும் உன்பேச்சும் திறமையும் செயல்பட வேண்டும்...”

“மன்னிக்கவேண்டும், ஸார். நீங்கள் அவர்களைவிட என்ன நலம் செய்திருக்கிறீர்கள் என்பது கேள்வி. இப்போது அந்த உயர் வகுப்புக்காரர் ஒருவர் ஒரு தலைவர், அவர்களுடைய வெறுப்பை மாற்றுவதாகத் தெரிகிறது. அவர்களும் துவேஷத்தை மறந்து ஒற்றுமைக்கு அடிகோலிவிட்டதாகச் சொல்கிறார்கள். இங்கோ வெளிப்படையாகப் பேசுபவர்களை, அந்தப் பாரபட்சச் செயல்களை ஆதரித்து உங்களைப் பாராட்டுபவர்களை, நீங்கள் மறுத்துக்கூட ஒரு அறிக்கை விடவில்லை. ஒரு கட்சிக்கு ஆதரவைத் தருவதால், ஒரு சாராரைப்பற்றி அவதூறாகப் பேசுவதையும் பொருட் படுத்தாமலிருக்கலாம் என்பது உங்கள் கொள்கையாக இருக்கும் பட்சத்தில் அந்த பாதிக்கபட்ட வகுப்பாரின் ஆதரவை நீங்கள் இழக்கவேண்டித்தான் வரும்.”

“மைத்ரேயி, யானை தன்மேல் எறும்பு ஊர்வதைப் பொருட்படுத்தாது. இந்தப் பெரிய கட்சி என்றுமே அப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/232&oldid=1101281" இலிருந்து மீள்விக்கப்பட்டது