பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

231

யாரோ சிலர் பேசுவதைப் பொருட்படுத்தப் போவதில்லை. இது மக்களாட்சி. அவரவருக்குக் கருத்தைச் சொல்ல, கண்டிக்க உரிமை உண்டு. அப்படிப் பெரியார் சொல்கிறார். அதனால் அவர் உங்களுக்கு இன்று ஆகாதவராகவும் அவர் கட்டிக் கொடுத்துக் கருத்ததூட்டி வளர்த்த தம்பிகள் நல்லவர்களாகியும் விடுவார்களா? இது அபத்தம். அப்படி ஆதரவை அவர்கள் மாற்றுக் கட்சிக்கு அளிக்கும் பட்சத்தில் எந்த நன்மையையும் பெறப்போவதில்லை. இருந்தாலும் நீ துணிந்து என்னிடம் கருத்தைக் கூறியதற்குப் பாராட்டுகிறேன். நீ நன்றாக யோசனை செய்துபார். மிஸ் ஞானம்...எனக்கு நேரமாகிறது. வரட்டுமா!...”

அவர் எழுந்து விடை பெறுகிறார். ஞானம் வாயில்வரை சென்று வழியனுப்புகிறாள்.


14

ராஜா சென்றபின் மைத்ரேயி அன்றிரவெல்லாம் அவரிடம் தான் பேசியதை நினைத்து நினைத்துப் பின்னும் கிளர்ச்சியுறுகிறாள். “என்றோ திராவிடர்களை ஆரியர்கள் விரட்டியடித்தார்கள் என்பதற்காக இந்தத் தமிழ் நாட்டில் அந்த வகுப்பார் பிறந்திருப்பதன் உரிமையையே மறுக் கலாமா?” என்று நேருக்கு நேராக மக்களவையின் பிரதி நிதியான ஒருவரிடம் அவள் கேட்டிருக்கிறாள். தனராஜிடம் தன்னை இழக்காமல் அவள் சீராகப் படித்துத் தேர்ந்திருந்தால் அந்த வருஷம் அக்கா அவளை யாரேனும் ஒரு இடைநிலை வெள்ளைக் காலர் ஆசாமிக்குக் கட்டி வைத்திருப்பாள். இரண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பற்றாக்குறையோடு போராடும் ஒருத்தியாக, கன்னச் செழிப்பு வற்ற, முடிகுச்சியாக ஒடிந்து கூழையாக, கவரிங் நகையிலும் போலிப்பட்டிலும் தன் மதிப்பை உயர்த்திக் கொள்ளும் இலட்சோப லட்சம் இடைநிலை அந்தணர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/233&oldid=1101282" இலிருந்து மீள்விக்கப்பட்டது