பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

ரோஜா இதழ்கள்

குலமகளிரைப்போல் அவளும் குட்டைக்குள் அழுந்திப் போயிருப்பாள். இப்போது, தான் பிறந்து வளர்ந்த சமுதாயம் கேள்விக் குறியாக நிற்பது போலும், அந்தக் கூனலை நிமிர்த்த முயற்சி செய்வதற்கான வழியில் தான் நிற்பதுபோலும் அவள் கிளர்ச்சியுற்றிருக்கிறாள். ராஜா அவளைக் காங்கிரஸ் மேடைக்குத்தான் அழைக்கிறார். ஆனால் அவளோ பெரும் பான்மையான அவளுடைய வகுப்பார் அமைக்கும் மேடையில் நின்று பேசத்தான் கனவு காண்கிறாள். வெளிப்படையாக அந்தணகுலத்தோரை உயர் பதவிகளிலிருந்து இறக்கியதற்காகப் பாராட்டுப் பெறும்போது அதை மறுக்கத் துணிவில்லாமலே மக்கள் ஆதரவைப் பெற விழையும் கட்சி அமைக்கும் மேடையைவிட எங்களிடம் வகுப்புத் துவேஷம் கிடையாது’ என்று சொல்லிக் கொண்டு இணைந்து செல்வ தில் ஆர்வம் காட்டும் கட்சியுடன் இணைந்து அமைக்கும் மேடையை அவள் பயனுள்ளதாக நினைக்கிறாள்.

காலையில் எழுந்திருக்கும்போது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. அவள் காப்பி போட்டுக் கொண்டு வருமுன் ஞானம் நீராடித் துணி அலசிப் பிழிந்துவிடுவது வழக்கம். இன்று ஞானம் நாட்தாளைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்.

“லிஸ்டர் உடம்பு சரியில்லையா உங்களுக்கு ?” ‘இல்லையே, நீதான் ராத்திரி அமைதியாகத் தூங்கியிருக்க மாட்டாய் என்று தோன்றுகிறது...” என்று நகைக்கிறாள் ஞானம்.

“நீங்கள் தேர்தலுக்கு நில்லுங்கள் அக்கா. உங்களுக்கு நான்பேசுகிறேன். ராஜா கூறினாற்போல் உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். முதல்தரமான அறிவாளிகள் முடங்கி விடுவதுதான் கோழைத்தனம்...”

“இந்த அரசியலுக்கு அறிவு வேண்டியதில்லை என்ற பாடத்தை நான் எப்போதோ படிச்சாச்சு, மைத்ரேயி, இன்றைய அரசியலுக்கு வேண்டிய தகுதி ஒன்றுகூட எனக்குக் கிடையாது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/234&oldid=1101283" இலிருந்து மீள்விக்கப்பட்டது