பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

233

“நீங்கள் இப்படிச் சொல்லி விட்டால் நம் சாதிக்கு விமோசனமே இல்லை. போட்டிபோட்டு நாம் போராடித் தான் நம் உரிமைகளைக் கேட்கவேண்டும்...”

“அசடு, நீ உலகம் அறியாமல் பேசறியேன்னு சிரிப்பு வருகிறது. ராஜா இங்கே வந்தது என்னை அரசியல் களத்துக்கு இழுப்பதற்கு அல்ல. அத்தகைய மேம்பட்டோரை மெள்ள விலக்கி, பணத்தின் செல்வாக்கால், வன்முறையால் தங்கள் கட்சிக்கு பலம் சேர்க்கக் கூடியவர்களை இணைத்துக் கொண்டதனாலேயே இன்றைய கட்சி அரசியல் இந்த நிலையில் இருக்கிறது. என்னை அரசியலுக்கு இழுப்பதனால் அவர்களுக்கு ஒரு லாபமும் இல்லை என்பதை அவரே அறி வார். அவர் இங்கே வந்தது உன்னைத் துண்டில் போட்டு இழுக்க..”

மைத்ரேயி முகம் அருணோதயமாகிறது. மெளனமாகக் காபிக் கிண்ணத்தை மேசைமீது வைத்துவிட்டு தினத்தாளைப் பிரித்துப் பார்க்கிறாள்.

“அரசியலில் என்னைப்போல் நீ தோல்வியடைய மாட்டாய்” என்று கிண்டுகிறாள் ஞானம்.

“அப்படி எப்படிச் சொல்ல முடியும் ? என்னைவிட நீங்கள் முதிர்ந்தவர்கள். நிதானமாகப் பேசுவீர்கள். நான் மேடையேறிப் பேசுவதைத்தான் விரும்புகிறேனே ஒழிய, அரசியல் பதவிக்குப் போட்டிபோட எனக்குத் தகுதி கிடையாது. நீங்கள் அவர்களுடைய காங்கிரசில் இணைய மாட்டீர்கள். எனக்கும் நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்தால் தான் குமுறும் கருத்துக்களை கொட்ட முடியும்.”

“ஓ..ஐஸீ மைத்ரேயி! நான் எந்தக் கட்சியில் சேர வேணும் என்பதையும் நீ தீர்மானித்து விட்டாயா?” என்று ஞானம் விழுந்து விழுந்து சிரிக்கிறாள். அவள் விளையாட்டாகச் சிரிக்கிறாளா, தீவிரமாகவா என்பதை மைத்ரேயியினால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“ஏன் சிரிக்கிறீர்கள், ஸிஸ்டர் ? இதே காங்கிரஸில் இன்றைக்குப் பழைய பெருமைகள் எதுவுமில்லை. பதவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/235&oldid=1101286" இலிருந்து மீள்விக்கப்பட்டது