பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

ரோஜா இதழ்கள்

மோகம், பண மூட்டை, சாதிச் சச்சரவு, நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற இறுமாப்பு இதெல்லாம் தானிருக்கின்றன. துவேஷத்தில் கிளர்ந்து வசைமொழி யாலோ, இசை மொழியாலோ வளர்ந்தாலும் இன்று பாமர மக்களிடையே அசைக்க முடியாத செல்வாக்குப் பெற்றிருக்கிறது எதிர்க்கட்சி. மிகவும் கண்ணியமாகவும் மரியாதையுடனும் பேசும் இளைஞர்களெல்லாரும் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் உயர் சாதிக்காரரின் மீது கொண்டிருந்த வெறுப்பை மறந்து இணைய வருவதை நான் ஒரு நல்ல எதிர்காலத்தின் துவக்கமாக எண்ணுகிறேன். இந்த நல்ல முயற்சியைச் செய்த பெரியவரை, தலைவரை நான் போற்றுகிறேன். அவருடைய பிரபுத்துவத்தை ஆதரிக்கும் கொள்கை எனக்குப் பிடிக்கவில்லைதான். எனினும் தென்னாட்டில் அரசியல் மட்டத்தில் சாதிப் பிளவை முக்கியமான சக்திப் பிளவை இணைத்து வைப்பது நல்ல முயற்சி என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.”

‘பக்குவம் வராத அரசியல் அறிவு இப்படித்தான் எண்ண முடியும். இந்த ஒட்டுதல் சந்தர்ப்ப லாபத்துக்காக. இதனால் பிராமண வகுப்பு நன்மையடையப் போவதாக நீ நினைத்தால் அதைப் போன்ற முட்டாள்தனம் வேறு கிடை யாது. என்னைக் கேட்டால் நீ போற்றும் பெரியவர் பிராமண வகுப்புக்குக் குழி தோண்டும் செயலைச் செய்கிறார் என்று சொல்வேன். வெறுப்பில் கிளர்ந்து வெறும் பகட்டு மொழியாலும் ஒழிக, அழிக கோஷங்களாலும் மக்கள் ஆதரவைத் தேடிக்கொண்டு வளர்ந்த கட்சி எந்த அளவுக்கு மக்களுக்கு நன்மை செய்யப் போகிறது என்பதைப் பற்றி எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் எனக்கு அந்த உயர் வகுப்பாரிடமும் அநுதாபம் கிடையாது. அந்தச் சமுதாயம் பெயரளவில் உயர்குலம் என்று சொல்லிக் கொண்டு அதற்குரிய செருக்குடன் மரியாதையை எதிர்பார்த்திருக்கிறதே ஒழிய, உண்மையில் அந்தச் சமுதாயத்துக்குத் தன்மானமும் சுய கெளரவமும் இல்லை. நீயே நினைத்துப்பார். எந்தப் பிராமணனேனும் தன் குல உயர்வை நிலைநாட்டிக் கொள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/236&oldid=1123754" இலிருந்து மீள்விக்கப்பட்டது