பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

235

படியாக, எந்தப் பிரச்னைக்கும் முடிவு கண்டிருக்கிறானா? ஒரு சராசரி பிராமணன் கோழை; துணிவில்லாதவன். அறிவு மட்டத்தில் அவன் உயர்ந்து என்ன பயன்? சாஸ்திரங்களையும் காவியங்களையும் கற்றறிந்து என்ன பயன்? நீ விரலைவிட்டுச் சொல். நாட்டில் புதிய மொழியும் புதிய அறிவும் வந்து கலந்த போதெல்லாம் பெரும்பான்மை பிராமண வகுப்பரே பற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எதற்காக? அதனால் அறிவைத் துலக்கிக் கொண்டு எந்தச் சமுதாயப் பிரச்னைக்கு அவன் விடை கண்டு குல மேன்மையை நிரூபித்திருக்கிறான்? மிகவும் தேர்ந்த படிப்புப் படித்து ஐ.ஸி. எஸ்.ஸ்-க்கு போனான்; வெள்ளைக்காரனைப் போல் வாழ்ந்தான்; ஒருத்தியைக் கல்யணாம் செய்து கொள்ளக் கிறிஸ்துவனாக மாறினான். பிராமணன் என்றால் அவன்பிரும்மத்தை உபாசிப்பவன். பிராமணத்துவம் என்பது மனிதன் ஆன்மீக நெறி நின்றடையக்கூடிய மிக உயர்ந்த நிலை. அவன் வாழ்வது மற்ற வருணத்தாரையும் அந்த அளவில் உயர் பண்புகளோடு மேம்பட்டு வாழச் செய்வதற்காகத்தான். அவனுக்கு வறுமை அணிகலன். ஆனால் இன்று நிலை என்ன? விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் ஒரு சிலர்கூட இந்நெறியைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை. அவன் அறிவு பயின்றதெல்லாம் பொருளாதார மேம்பாட்டுக்காக, புலன்களில் அழுந்தி இன்பம் துய்ப்பதற்காக. இந்தக் குறிக்கோளை வைத்துக் கொண்டு சாதி உயர்வைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான். படிப்பறிவும் அச்சுப் பொறியும் இல்லாத காலத்தில் மரத்தடிகளில், கோயில் முன் கூடும் மக்களுக்கு ஆன்மீக உணர்வை ஊட்ட, சாஸ்திரங்களிலிருந்தும் புராணங்களிலிருந்தும் நற்பண்புகள் பெருகக் கூடிய வகையில் கதைகளும் காவியங்களும் விளக்கமாகச் சொன்னார்கள். இன்று அது ஒரு பணப் புதையலாகக் கிடைக்கக்கூடிய தொழிலாக, என்டர்டெய்ன்மென்ட் வால்யூ உடையதாக மாறிவிட்டது. உடலை விற்று ஆடிப்பிழைக்கும் சினிமா நடிகைக்கும், இவர்களுக்கும் இன்று ஒரு வித்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/237&oldid=1123758" இலிருந்து மீள்விக்கப்பட்டது