பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

237

விட்டுப் பின்னர் கட்சிப் பிரமுகர்களின் முன்னிலையில் வாழ்த்துத் திருமணத்தை பிரபலமாக நடத்துகின்றனர் அந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள். போன வருஷம் என்னோடு படித்த கலையரசியின் திருமணத்தின்போது நானே இந்த வேடிக்கையைப் பார்த்தேன். பாசிக் குளத்தில் இறங்கித்தான் சுத்தம் செய்ய வேண்டுமே ஒழிய, பாசி பிடித்த நீரைத் தலையில் தெளித்துக் கொண்டு போகும் நம்பிக்கையைப் பழிப்பதால் பயனில்லை, எலிஸ்டர்!”

ஞானம் மறுமொழி கூறாமல் புன்னகை செய்கிறாள். மைத்ரேயியின் முகத்தில் வெற்றி கொண்டாற்போன்ற பெருமிதம் பொலிகிறது. ராஜாவின் புகழ்ச் சொற்கள் செவியருகே வந்து வந்து அவளுடைய தன்னம்பிக்கைக்கு மெருகு கொடுக்கின்றன. வழி நெடுக, வெளியில் இறங்கியதும் அவள் கண்களில் படும் அரசியல் சூழலில் அவள் தன்னையறியாமல் பங்கு கொண்டிருப்பதாக நினைக்கிறாள். பல்கலைக் கழக நூல் நிலையத்துக்குச் சென்றவள் அன்று கல்லூரியிலிருந்து மூன்றரை மணிக்கே வீடு திரும்ப பஸ் நிற்குமி டத்துக்கு வந்து நின்று கொண்டிருக்கிறாள்.

மைத்ரேயி, சுதந்தரப் போராட்ட நாட்களைப் பார்த்ததில்லை. படித்திருக்கிறாள்; கேள்விப்பட்டிருக்கிறாள். கல்வி கற்கும் இளைஞர்களை எல்லாம் போராட்டக்காரர்களாக மாற்றிய அந்த நாட்கள், இந்த நாட்களைப்போல்தான் இருக்குமோ என்று நினைத்துக்கொண்டு நிற்கிறாள். எதிரே தேநீர்க்கடையில் எழுத்துக்கள் கறுப்பு-சிவப்பு வண்ணங்களில் பளிச்சிடுகின்றன. தேநீர்க் கடையைச் சுற்றிக் கறுப்பு சிவப்புத் தோரணம். தேநீர்க்கடைப் பையனுடைய மார்பில் கறுப்பு சிவப்பு வண்ணங்களில் உதய சூரியன் இடம் பெற்றி ருக்கிறான். தேநீர்க்கடைகள், சோடாக் கடைகள், முடிதிருத்தும் கூடங்கள், தையற்கடைகள் என்று நகரின் வாலாய் நீண்டு செல்லும் புறநகர்ப் பகுதிகள் நெடுகிலும் கறுப்புசிவப்பின் ஆதிக்கம் கண்களை மட்டும் கவர்ந்து நின்று விடவில்லை. சினிமாக் கொட்டகைகள், அண்ணா அறிவகங்கள், படிப்பகங்கள் எங்கும் புதிய தலைவர்களின் புகழே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/239&oldid=1100179" இலிருந்து மீள்விக்கப்பட்டது