பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

ரோஜா இதழ்கள்

மணக்கிறது. சினிமா நடிகர்களின் முகங்களே காட்சி தந்து கொண்டிருந்த சுவரொட்டிகளில் அண்ணாவும் மூதறிஞரும் போட்டி போட்டுக் கொண்டு முகமலர்ச்சியைக் காட்டுகின்றனர். தேர்தல் நெருங்கி வருகிறது; இந்தத் தேர்தல் முந்தைய தேர்தல்களைப் போன்றதன்று என்ற பரபரப்பு, காணும் இடங்களிலெல்லாம் உள்ளோட்டமாய்த் துடிப்பது போல் மைத்ரேயிக்குத் தோன்றுகிறது.

பொதுக்கூட்டத்தின் அடுக்குமொழிப் பேச்சுக்களில், ஒலி பெருக்கி ஒலி பரப்பும் சினிமாப் பாட்டுக்களில், மக்கள் முக மலர்ந்து பேசும் பேச்சுக்களில், ஆழத்தில் வேரோடி, நீண்டு நிமிர்ந்த கிளைகளும் விழுதுகளுமாக அசைக்க முடியாதென்ற உறுதியுடன் நிற்கும் ஆலமரம் போன்ற ஆளும் கட்சியின் சாதனைப் புகழ்களெல்லாம் பகல் நேரத்துச் சந்திரனாய் ஒளியிழந்து போகும் விந்தையை அவள் காண்கிறாள்.

பஸ் ஏன் இன்னும் வரவில்லை? “தமிழ் வாழ்க!” என்ற கோஷத்தை கவசமாய் தன் மேனியில் சுமந்துகொண்டு வரும் அரசினர் பேருந்து ஊர்தி, ஏன் இன்னமும் வரவில்லை ?

மூட்டை முடிச்சு, பைகள் அந்த ஆலமரத்தடியில் குவிகின்றன; மக்களும் கூடுகின்றனர். அப்போது அவளருகில் முடி நீக்கிய தலையை இறுகக்காது மறையத் தலைப்பால் முக்காடிட்டுக் கொண்டு கச்சலாக ஒரு பார்ப்பனக் கைம்பெண் இடுப்பில் ஒரு துருப்பிடித்த டப்பாவுடனும் கையில் ஒரு பையுடனும் வந்து நிற்கிறாள்.

“இங்கே அம்பத்திரண்டு பஸ் நிற்குமில்லையா?” “சர்க்கார் பஸ் இங்கே நிற்காது. பிரைவேட் பஸ் நிற்கும். நீங்கள் எங்கே போகனும்?”

“ஆலந்துார் கிட்டப் ஃபாக்டரி குவார்ட்டர்ஸ் இருக்கே, அங்கே...”

“சர்ஜிகல் இன்ஸ்ருமென்ட்ஸ் ஃபாக்டரி குவார்ட் டர்ஸா...?” என்று கேட்கும் மைத்ரேயி சட்டென்று அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/240&oldid=1101289" இலிருந்து மீள்விக்கப்பட்டது