பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

239

முகத்தைக் கூர்ந்து நோக்குகிறாள். ‘நீங்க...நீங்க’ சொற்கள் தொண்டையில் முள்ளாய்ச் சிக்கிக் கொண்டாற்போல் கண்களில் கசிவு உண்டாகிறது.

“ஆமாம், மதுரந்தான். நீ மைத்ரேயி இல்லே? நீ ஹோமை விட்டுப் போய் மேலே காலேஜில் படிக்கிறேன்னு லோகா சொன்னாள் ஒரு நாள். எனக்கு உன்னைப் பார்த்த உடனே தெரிஞ்சுடுத்து...” என்று தலையை அசைத்துப் புடவையை நீக்கிச் செவியை விடுதலை செய்து கொள்கிறாள்.

“இது என்ன மாமி கோலம்: இப்படி...” மதுரம் வெளிறிய புன்னகையைச் சிந்துகிறாள். கண்களும் நிறைகின்றன.

“அவர் போய் ஒண்ணரை வருஷமாச்சே! மயக்க மருந்தைத் தின்னுட்டு, லாரியில் அறைபட்டு. கண் கொண்டவா பார்க்க மாட்டா..”

மதுரம் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள். “இந்தக் காலத்தில், நீங்கள் எதுக்கு மாமி இந்தக் கோலம் பண்ணிக்கணும்? எனக்கு சகிக்கலியே ?”

“என்னம்மா பண்றது? அஞ்சு குழந்தைகளை வச்சிண்டு அல்லாடிப் போனேன். பெரியவன் அப்பவே சொல்லாம கொள்ளாம எங்கோ ஒடிப் போயிட்டான். பம்பாயோ கல்கத்தாவோ, எல்லாம் சிறிசுகள். ஒரு வருஷம் ஆகாம யார் வீட்டில் என்னைச் சேத்துப்பா ?”

“அப்புறம் சொன்னா, சுவாமிகள் மடத்திலே பிராமணப் பையன்கள்னா எதானும் ஒத்தாசை பண்ணுவா, போய்க் கேளுன்னா. அதுக்குத் தலைவச்சுக்கக் கூடாது. சரின்னு திருவையாத்துக்குப்போயி இப்படிப் பண்ணிண்டு வந்தேன். ரெண்டும் பாடசாலையில் இருக்கு. ஒரு வருஷம்போல நானும் அங்கதான் மடத்திலேயே இருந்தேன். சொர்ணத்தைக் கோவில் மடப்பள்ளியில் வேலை செய்யற பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிக்குடுத்தேன். கீழ்க்களை ரெண்டையும் லோகா ஒரு வருஷத்துக்கு பாலாலயத்துக்குச் சிபாரிசு பண்ணி வச்சுக்கச் சொல்லியிருந்தா. இப்பக் கூட்டிண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/241&oldid=1101294" இலிருந்து மீள்விக்கப்பட்டது