பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

ரோஜா இதழ்கள்

வந்துட்டேன். படிக்கிறது ஸ்கூலில், தெவசம் திங்கள்னு சமைக்கப்போக முடியறது. கையில் காசு கிடைக்கறப்ப, எதோ முறுக்கு சீடைன்னு போட்டு விக்கறேன்...”

“உங்களைப் பார்க்கவே சகிக்கலியே மாமி ? உங்க முடி என்ன பாவம் பண்ணித்து ?”

“பெரியவாளைப் பாத்தா பாவம். மூணு நாள் பிட்சை எடுக்கமாட்டா. நம்ம மதம், தருமம்னு இருக்கேம்மா? நீ எங்கே இருக்கே? இன்னும் படிக்கறியா? வேலை பார்க்கறியா ?”

மைத்ரேயிக்குக் குற்ற உணர்வு குத்துகிறது. தனக்கு அவள் மோர் ஊற்றிச் சோறிட்ட காட்சி எப்போது நினைத் தாலும் நெஞ்சு நெகிழ முன் தோன்றுமே ?

“எப்படி மாமி நீங்க இதுக்கு ஒப்பினேன்? லோகாவெல்லாம் ஒரு ஒத்தாசையும் செய்யலியா உங்களுக்கு ?”

“இதுக்கு ஏம்மா நீ இப்படிப் பரிதவிக்கிறே? லோகாதான் எனக்கே இந்த யோசனையைச் சொன்னாள். கீழ்க்கடைக்கும் ஒரு வழி பண்ணினாள். தலைமுடி இருந்து என்ன கண்டேன் ? எண்ணெய் கிடையாது, பிண்ணாக்குக் கிடையாது. அது குச்சி குச்சியா நரைக்க ஆரம்பிச்சுடுத்து. இப்ப முற முறக்க இருக்கு. உன் மனசில வச்சுக்கோ. லோகாவே ஒரு வருஷத்துக்குள்ள அவாத்துக்கு நான் போறதுக்கு இஷ்டப் படல. வாஸ்தவந்தானேம்மா ? இப்பத்தான் அவளும் அவாத்துக்காரரும் சண்டை சச்சரவு இல்லாம ஒண்ணா யிருக்கா, ராஜா வரதில்ல. காங்கிரசை விட்டுப் பிரிஞ்சுட்டா. உனக்குத் தெரியாம இருக்குமா? நான் சொல்லப் போறேனே..”

மைத்ரேயிக்கு நினைக்க நினைக்க ஆறவில்லை. அந்தப் பையன்கள் இருவரும் கண்முன் பார்க்கும்போதே பைக்குள்ளிருந்து பணத்தை எடுத்த குழந்தைகள். வயிற்றுக்கில்லாமல் திருடக் கற்றாற்போல் வயிற்றுக்கில்லாமல் வேதம் ஓதப் போயிருக்கின்றனர். வயிற்றுப்பசி தீர்க்கப் படிப்பு. பொருள் தெரியாமல் மொழி தெரியாமல் மந்திரங்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/242&oldid=1100197" இலிருந்து மீள்விக்கப்பட்டது