பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

ரோஜா இதழ்கள்

"மாமி உங்க விலாசம் சொல்லுங்கோ, நான் வரேன்?”

“வாம்மா, விலாசமென்ன, பெரிய விலாசம்? எனக்குக் கடிதாசு போடறவா தட்டுக்கெட்டுப் போறதா? பழைய மாம்பலம் குளம் இருக்கோல்லியோ? அதோட வடக்கால நேராப் போனா சுப்பராயன் சந்துன்னு ஒண்னு வரும். அங்கே ஒரு தாவரத்தில குடியிருக்கேன். அதுக்கே பதினைஞ்சு ரூபாய் வாடகை எதிர்க்க ஒரு தகரக்காரன் கடை. மதுரம் மாமின்னு கேட்டாச் சொல்லுவா. பஸ் வராப்பல இருக்கே...”

“...ஆமாம் மாமி, இது ஃபாக்டரி குவார்ட்டர்ஸ் போகும் ஏறிக்குங்கோ...”

கைப்பையை வாங்கி கொண்டு அவளைப் பஸ்ஸில் ஏறச் சொல்லிவிட்டு மைத்ரேயி பிறகு பையை அவள் கையில் கொடுக்கிறாள்.

இனி அந்த ஞானம்மாவின் சொகுசான நிழலும் ஊட்டமான உணவும் வெய்யில் படாத வாழ்க்கையையும் அவள் அநுபவிப்பது பெருந்துரோகமாகும் என்று மைத்ரேயி கருதுகிறாள்.

எப்படியேனும் ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டும். இந்தச் சாதியின் சீரழிவை அடித்தளத்திலே தடுக்க வேண்டும்...

அன்று அவள் வீடு திரும்பும்போது, எம்.ஏ. பரீட்சை எழுதும் உறுதிகூட ஆடிப்போகிறது.

15

வள் வீடு திரும்பும்போது ஞானம்மா வீட்டிலிருப்பாள் என்று மைத்ரேயி கருதியிருக்கவில்லை. ஐந்தரை மணிக்கு மேல் தான் ஞானம் அலுவலகத்திலிருந்து திரும்புவது வழக்கம். ஜானகியின் வீட்டில் சாவி கொடுத்திருப்பாள். மணி ஐந்தடிக்கிறது. கதவும் திறந்திருக்கிறது. முன்னதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/244&oldid=1101593" இலிருந்து மீள்விக்கப்பட்டது