பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

ரோஜா இதழ்கள்

ஒரு ஸ்வீட் பண்ண்லான்னு நினைச்சேன். பிறகு ஒரு காரமும் இருந்தால்தான் சரியாக இருக்கும்னு தோணித்து...”

மைத்ரேயி ஒருகணம் சலனமற்று நிற்கிறாள். யாரையோ அழைத்து வருகிறேன் என்றால் அதற்கு ஸ்வீட் காரமா? அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு டாக்டர் பையனை எதற்கு அழைத்து வருகிறார்களாம் ? எதற்கு ஸ்வீட் காரம் பண்ணுவானேன்?

“இனிப்புப் போறுமா என்று பார்!"என்று அவளிடம் ஒரு தேக்கரண்டியில் கொஞ்சம் எடுத்துக் கொடுக்கிறாள்.

“வாசனையே சொல்கிறதே? போறும்.” மைத்ரேயியினால் ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு கால் ராஜா வருவதாகச் செய்தி அனுப்பி இருப்பாரோ? -

ஞானம் பொய் சொல்லமாட்டாள்.

ஐ.எம்.எஸ். என்றால், போருக்குப் போயிருப்பவனாக இருக்கும். அதற்காக உபசாரமா ?

மைத்ரேயி முகம் கழுவிப் பொட்டு வைத்துக்கொண்டு உள்ளே மீண்டும் நுழைகிறாள். ஞானம் அல்வாவை இறக்கி வைத்துவிட்டு போண்டாவை உருட்டிக் காயும் எண்ணெயில் போடுகிறாள்.

“நீங்கள் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஹவுஸ் வைஃப் ஆக இருப்பீர்கள் அக்கா !”

ஞானம் திரும்பிப் பார்க்கவில்லை. “மிக்க நன்றி. நீ போய்த் தலை வாரிக் கொண்டு கொஞ்சம் ஃபிரஷ்ஷாக இரு !”

“எனக்கென்ன இப்ப; நான் எப்போதும் ஃபிரஷ்ஷாகத் தானிருக்கிறேன்.”

“நான் சொல்வதைக் கேளேன் ?”

மைத்ரேயி பூடகத்தை உடைக்கத் தயாராக, “நான் கேட்க மாட்டேன்” என்று சிரிக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/246&oldid=1101302" இலிருந்து மீள்விக்கப்பட்டது