பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

245

"இப்போதெல்லாம் நன்றாகப் பேசத் தெரிந்து கொண்டு விட்டாய். கேட்காவிட்டால் போ.”

மைத்ரேயி சாப்பிடும் கூடத்து மலர்க் குடுவையைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். ஜப்பானிலிருந்து அக்காவுக்கு யாரோ நண்பர் வாங்கிக் கொடுத்த பீங்கான் குடுவை அதைப் படுக்கையறை அலமாரியில்தான் வைத்திருந்தாள். இன்று அதை எடுத்து ஜினியாப் பூங்கொத்தை வைத்திருக்கிறாள். பொருத்தமாக இல்லை . ஞானம்மாவுக்கு இந்த அலங்காரக் கலைகளில் ஆர்வம் உண்டு.

பால்காரன் வருகிறான் வாயிலில். அதிகமாகப் பால் பாகுவதற்காகப் பெரிய பாத்திரத்தை ஞானம்மா எடுத்து வருகிறாள்.

இதுவரையில் அவளுக்குத் தெரிந்து எத்தனையோ விருந்தினர் வந்திருக்கின்றனர். ஆனால் ஞானம், அவளை “முகம் திருத்திக் கொள்” என்று சொன்னதில்லை. என்ன விசேஷம்?

பளீரென்று மின்னல் பொறி போல் ஒரு நினைவு தோன்றுகிறது.

அந்தப் பக்கம் எங்கேனும் தனராஜ் பொதுக்கூட்டத்தில் பேச வருகிறானா?

அக்கா இவளை அவனுடன் சேர்த்துவைக்கப் போகிறாளா?

சுவரெட்டிகளை அவள் நன்றாகப் பார்த்தாளே?

இந்த எதிர்பாரா ஊகம் தோன்றியதும் மைத்ரேயிக்கு ஒரு பொருந்தாமை உண்டாகிறது.

தனராஜ் தன்னை வந்து சந்திக்க நேரும் என்ற எண்ணமே .அவளுக்குத் தோன்றியதில்லை. அப்படி ஒரு சந்தர்ப்பம் நேரும் என்று அவள் அதுகாறும் நினைத்திருக்கவில்லை. ஆனால் நிகழ்கால அரசியல் விநோதங்களை நினைக்கையில் எதுவும் நடக்கும் என்றே தோன்றுகிறது.

லோகாகா, அறிவு மறுமலர்ச்சி பெற்றவள். விரிந்த மனம் உடையவள் என்று அவள் கருதிய லோகா, மதுரத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/247&oldid=1101303" இலிருந்து மீள்விக்கப்பட்டது