பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

ரோஜா இதழ்கள்

கணவன் இறந்து ஒராண்டுக்குள் அவளுடைய வீட்டுக்குள் வரலாகாது என்று தடுத்து முடி நீக்கக் காரணமாக இருந்தாள் என்றால், வேறெந்த சம்பவம்தான் நிகழாது ? போலியாக வாழ்ந்த கணவனுக்காக அப்படி மாறிவிட்டாளா? ஆச்சாரியார் என்று இகழ்ந்து தூற்றியவரை இன்று துாற்றியவர்களே ‘மூதறிஞர்’ என்று போற்றுகிறார்கள். தனராஜ் மைத்ரேயியைக் கட்சிக் கூட்டாக அழைக்க வரலாம்.

அவன் வரும்போது அவள் என்ன செய்வாள்?

பெரும் கேள்வியாக அவள் மனக் கண்ணில் அது விஸ்வருபம் எடுக்கிறது.

அக்கா அவள் அந்தக் கட்சியில் இணைவதை ஆதரிக்க மாட்டான்.

ஆனால், தனராஜின் மனைவி என்று வரும்போது ? அவள் பழைய மைத்ரேயி இல்லை; ஆனால் அவனும் பழைய தனராஜாக இல்லாமல் இருக்கலாமே ?

“என்ன இப்படியே உட்கார்ந்திருக்கிறாய்? என்ன யோசனை ?”

“நீங்கள் உள்ளத்தை ஒளியாமல் கூறுங்கள்; தனராஜ் வருகிறானா?” ஞானம் விழிக்கிறாள். “யார் தனராஜ் ?”

மைத்ரேயி கோபத்துடன்,” தெரியாதது போல் பாசாங்கு செய்ய வேண்டாம். ஆலமரத்துக் கிளிப்பாட்டுப் போட்ட திரைப்படக் கவிஞர், கட்சியின் தூண் போன்ற உறுப்பினர். அரசியல் என்றால் வெட்கம் மானம் ஒன்றுமே இருக்காது போலிருக்கிறது” என்று வெடுவெடுத்துவிட்டுச் சிவக்குட் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.

“அட ராமா” என்று ஞானம் கேட்டுவிட்டுச் சிரிக்கிறாள்.

“எனக்கு அவனைப் பற்றி நினைப்பேயில்லை. அப்படி யாரும் வரப்போறதில்லை.”

“பின் என் அலங்காரத்தில் உங்களுக்கென்ன ஆவல்? ஏதோ சொஜ்ஜி பஜ்ஜியைப் பண்ணி வைத்துக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/248&oldid=1101305" இலிருந்து மீள்விக்கப்பட்டது