பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

247

பண்ணை ரெடியாக இரு என்று சொல்பவர்கள் போல் இருக்கிறதே உங்கள் நடப்பு ?”

ஞானம் அவளை நேராகக் கனிவுடன் நோக்குகிறாள். மைத்ரேயின் முகம் குழம்பியிருக்கிறது.

“கோபிச்சுக்காதே, மைத்தி. எண்ணம் அப்படியில்லைன்னு நான் சொல்லலே. நேற்றே இதைச் சொல்லத்தான் ஜானகி வந்தாளாம். காலையில் பத்து மணிக்கு ஆபீஸிலேயே ராமசேஷன் கேட்டார். ‘மிக நல்ல பையன். வயசு முப்பது ஆகிறது. ஜாதகம் வரதட்சிணை எல்லாம் கிடையாது. உங்கள் தங்கையைப் பற்றி நாங்கள் சொன்னோம். அவனே இன்று காலையில் அவள் காலேஜூக்குப் போவதைப் பார்த்துவிட்டு இவள்தானா’ என்று கேட்டான். அவனை சாயங்காலம் கூட்டி வரட்டுமா என்று கேட்டார். நான் என்ன பதில் சொல்ல ? வரச் சொன்னேன்!”

புளிக் குழம்பையும் பாயசத்தையும் மோரையும் ஊற்றிக் கலந்து ருசிப்பது போல் இருக்கிறது.

“நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு வரச்சொன்னீர்களக்கா ? நான் என்ன கன்னிப்பெண்ணா ?”

“மெதுவாகப் பேசு மைத்ரேயி, எனக்குத் தெரியும். ஆனாலும் உன் எதிர்காலத்தைக் குறித்து எனக்குக் கவலை இருக்கிறது...”

“நான்சென்ஸ்” என்று முணுமுணுக்கிறாள் மைத்ரேயி, “யாரு, நானா?” “இல்லே. மன்னியுங்கள் அக்கா. என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லையே? நீங்கள் என்ன முடிவோடு, துணிவோடு அவர்களுடைய அந்த எண்ணத்துக்கு இடம் கொடுத்து வளர விடுகிறீர்கள் என்று நான் நினைக்கட்டும்?”

“பொறு, ஆத்திரப்படாதே மைத்ரேயி, நீ உன்னுடைய அந்தக் கல்யாணமோ, எதுவோ, அதை இன்னும் உயிருள்ள தாகத்தான் நினைத்திருக்கிறாயானால் சொல். நான் உன்னை வற்புறுத்தவில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/249&oldid=1101308" இலிருந்து மீள்விக்கப்பட்டது