பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

249

அமைப்பில் இருந்து கொண்டு உன் அறிவையும் ஆற்றலையும் சமுதாய நலனுக்குப் பயன்படுத்தலாம் என்று நான் எண்ணினேன்...”

வியப்பும் கண்ணிரும் அலைமோத அவள் ஞானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

“வாருங்கள், வாருங்கள்...”
“நமஸ்காரம்...”
ராமசேஷன் “டாக்டர் முரளி...” என்று அறிமுகம் வசயது வைக்கும் குரல் மைத்ரேயிக்குக் கேட்கிறது.

“உட்காருங்கள், உட்கார் ஜானகி...சிவு எங்கே?...”
“சிவு. பார்ட்டிக்குப் போயிருக்கிறான்.” ஜானகி சிரிக்கிறாள்.

“பார்ட்டியா ?”
“ஆமாம். மிஸஸ்கோகலே வந்து அழைச்சிட்டு போனாள். ஸிமிக்கு இன்னிக்கு பர்த் டே.”

“ஓ! பெரியவங்க பேசும் இடத்தில் வேண்டாமென்று அனுப்பிவிட்டாயாக்கும் !”

சிரிக்கிறார்கள்.
“நீங்கள் இப்ப லீவில் வந்திருக்கிறீர்கள், இல்லையா?”
“ஆமாம்.”
“உங்களுக்கு டில்லியில்தான் படித்ததெல்லாமா ?” “நான் இங்கே மெட்றாஸ் மெடிகலில்தான் படிச்ச தெல்லாம். அப்பா அம்மா இப்ப இந்துாரில் இருக்கிறார்கள்.”
‘மெட்ராஸ் மெடிகலிலா? எந்த வருஷத்தில்?”
” அறுபதில் பாஸ் பண்ணினேன், அறுபத்திரண்டில் ஸர்விஸ்-க்குப் போனேன்.”

ஞானம்மா, இண்டர்வியூக்கு வந்த இளைஞனைக் கேள்வி கேட்பது போல் பேசுவதாக மைத்ரேயி நினைத்துக் கொள்கிறாள். டிராயிங் ரூம் பேச்சு என்ற நாகரிகமே ஞானத்துக்குப் பழக்கமில்லை. பெண் எத்தனைதான் படித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/251&oldid=1101310" இலிருந்து மீள்விக்கப்பட்டது