பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

253

“வேலைக்காரி பறங்கிக்காய் வாங்கிப் போனது கண்ணில் பட்டதோ ?”

‘இது வீட்டுக் கொல்லைக் காயாக்கும்!”
"அதெல்லாமில்லை. எதிலெல்லாம் அல்வா பண்ணுவார்களென்று நினைத்தேன். எங்கள் மெஸ்ஸில் இந்தப் பறங்கிக் காயைத்தான் ஒரு சீஸனில் எல்லா உருவங்களிலும் வைப்பார்கள்” என்றான் முரளி, உடனே பேச்சு மெஸ்ஸிலிருந்து ஸர்வீஸுக்குத் திரும்புகிறது.

“நீங்கள் ஏன் ஸர்வீஸ் டாக்டராகப் போனிர்கள்?” என்று கேட்கிறாள் மைத்ரேயி. அவளுக்கு இப்போது கொஞ்சமும் அவனிடம் பேசுவதில் நெருடல் இல்லை.

‘அறுபத்திரண்டில் சீனாக்காரன் படை எடுத்தான். நான் ஏதோ ஒரு ப்ரைமரி ஹெல்த் சென்டரில் ஈ ஒட்டும் நிலையில் தானிருந்தேன். அங்கே மருந்தும் கிடையாது; நோயாளிகளும் வரவில்லை. பேசாமல் காக்கி உடுப்பை மாட்டிக் கொண்டேன். எனக்கு இப்போது இதுஒத்துப் போய்விட்டது. அதுவும் போர்முனையில் புதிய புதிய அநுபவங்கள். மரணப் போராட்டத்தில், மரணத்தின் சந்நிதியில் நாம் உதவுகிறோம் என்ற உணர்வு பிறவி எடுத்ததன் பயனையே முழுசாக உணர்வதுபோல் ஒரு நிறைவு தருகிறது.”

“வாழ்க்கையில் அத்தகைய உணர்வைப் பெற ஸ்ர்வீஸ் டாக்டராகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. எந்தக் கர்மத்தைச் செய்தாலும் தன்னலத்தைக் களைந்து, பொது நலம் என்ற குறியிலே இயங்கும்போது அத்தகைய நிறைவு வரும். அப்படி அவரவர் தம் கருத்தைச் செய்வதையே கர்ம வேள்வி என்கிறது கீதை...” என்று மொழிகிறாள் ஞானம்.

“அது சரிதான் அக்கா. அப்படித் தன்னலமற்றதோர் சேவையைச் செய்ய மனம் விரும்பினாலும் கிடைத்திருக்கும் சந்தர்ப்பமும் சூழலும் ஒருவரைச் சுதந்திரமாக இயங்க அநுமதிக்க வேண்டும். இவரே முதலில் பிரைமரி ஹெல்த் சென்டரில் ஏன் கிராமசேவை செய்ய முடியவில்லை? ஈ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/255&oldid=1100482" இலிருந்து மீள்விக்கப்பட்டது