பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

255

“சினிமாக் கொட்டகைகளா? நீங்கள் என்ன அடிமடியில் கைவைக்கிறீர்கள்!” என்று சிரிக்கிறாள் ஜானகி.

“சினிமா என்றால் அக்காவுக்குக் கோபம் வரும். அதுவும் தமிழ்ப்படம் என்றால் அதிகமாக வரும்” என்று மைத்ரேயி விளக்குகிறாள்.

“அதெல்லாமில்லை. நான் இரண்டு வருஷம் சென்ஸார் போர்டில் இருந்தேன். ஆட்சேபிக்கும் பகுதிகளை அப்போது ஒப்புக்கொண்டு வெட்டியெறிவதாகச் சொல்லிவிட்டு, திரையிடும்போது சேர்த்துக் கொள்வதாக அறிந்தேன். நான் ஒருத்தி மட்டும் தூய்மை என்றால் போதுமா? தூய்மையினால் அழுக்கை வெல்ல முடியாது; அழுக்கு வேண்டு மானால் துய்மையை அழிக்கும் என்று விலகிவிட்டேன்.”

‘அதனால் தூய்மை காப்பாற்றப்பட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று முரளி கேட்கிறான்.

மெல்ல வாழைப்பழத்தில் ஊசி செருகுவதுபோன்று அவன் ஞானம்மாவைக் கோழை என்று சொல்வதாக மைத்ரேயி நினைக்கிறாள்.

“நீங்கள் தவறாக நினைக்காதீர்கள். நம் ‘இண்டெலக்சுவல் ‘ வகுப்பிற்குட்பட்டவர்களெல்லாரும் இப்படித்தான் சந்தர்ப்பம் வரும்போது கோழையாகச் செயலாற்றாதவர்களாக ஒதுங்கி விடுகிறார்கள். எது எப்படி வேண்டுமானாலும் போகட்டும். நம்மிடம் அழுக்குப் படக்கூடாது. மற்றவர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்டிருப்பார்கள். ‘நானும் வாங்கியதாக அவர்கள் நினைத்து விடக் கூடாது’ என்று உங்கள் அழுக்குப்படாத தன்மையை விளக்கிக் காட்டுவதில்தான் உங்களுக்கு அதிகமான கவலை இருக்கிறது. இதனால் என்ன பயன்? நீங்கள் ஒதுங்குகிறீர்கள்; சினிமா பழையபடியே தீமைகளை வளர்க்கிறது...” என்று முரளி தொடர்ந்து பேசுவதற்கு மைத்ரேயி உள்ளூரப் பாராட்டு கிறாள். ஞானத்தைப் பற்றிய அவள் கருத்தும் அதுவே.

“நீங்கள் கோழை என்று சொல்லலாம். இப்போது இங்கே நடப்பது அறிவு நாயகமோ, நீதி நாயகமோ, உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/257&oldid=1101322" இலிருந்து மீள்விக்கப்பட்டது