பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

257

பெருமையைக் கொடுத்த நீங்கள் இப்போது உலகத்து மூடத் தாய்யமாரைப்போல் நினைப்பது கொஞ்சம்கூடப் பொருத்த மில்லாதது. அதனால்தான் தோல்வியடைந்தீர்கள்.”

ஞானம் தோல்வியடைந்ததாகக் கருதவில்லை. அவளுடைய தீவிரமான சிந்தனையும் மாறவில்லை.

“உன் எதிர்காலத்தைக் குறித்து நீ ஒரு தீர்மானமும் இல்லாமலிருக்கிறாய் என்று எனக்குப் புரிகிறது. உன்னால் ஒருவிதமான முடிவுக்கும் வரமுடியாது என்று எனக்குத் தெரியும்.”

“அப்படி ஒன்றுமில்லை. என்னுடைய வாழ்க்கை எந்த வகையிலேனும் இந்த சமுதாயத்தின் கூனலை நிமிர்த்தவோ, வறுமையைத் தொலைக்கவோ பயன்படவேண்டும்,” என்று கூறும்போது அவளுக்கு மதுரத்தின் நினைவு பொங்கி வருகிறது. “இந்த நவீனயுகத்தில் பெண்கள் முன்னேற்றம், சமுதாய நலன் என்று பொது வாழ்வில் ஈடுபட்ட ஒருத்தி, ஒரு அபலைப் பெண், தன் கணவனை இழந்து நான்கு குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கையில் ஒரு வருஷம் வீட்டுக்குள் சமையல் வேலை செய்யக்கூட வரக்கூடாது, முடியை எடுத்துவிட்டு வா என்று சொல்லும் இடத்துக்குப் பிழைக்கப் போ...என்று சொன்னால் எப்படி இருக்கும்?. மதுரத்தை நான் பார்த்தேன் அக்கா. எனக்கு நெஞ்சு கொதிக்கிறது. இப்போதே படிப்பை விட்டுவிட்டு ஏதேனும் வேலை தேடிக்கொள்ளலாம் என்று நினைத்தேன்.”

“உன்னால் தனிப்பட்ட முறையில் ஒன்றுமே செய்ய முடியாது. மேல்நாட்டில் எல்லாம் பெண்கள் எப்படித் தனித்துச் சுதந்திரமாக எல்லாத் துறைகளிலும் வருகிறார்கள் என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். நேற்றுக்கூட ‘மார்க்ரட் போர்க் வொயிட்'டின் வாழ்க்கையைப் படித்துக் கொண்டிருந்தேன். அவள் இரண்டு முறைகள் கல்யாணம் செய்து கொண்டு விலக்குப் பெறுகிறாள் . ஆனால் என்ன? உலகப் போர்களை எல்லாம் பார்த்தவள். உலகத் தலைவர்களை எல்லாம் தன் புகைப்படத் தொழிலில் சந்தித்துப் பேசுகிறாள். சாகசமான வாழ்க்கை. அப்படி நம்மிடையே, மிகச்

ரோஇ - 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/259&oldid=1108769" இலிருந்து மீள்விக்கப்பட்டது