பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

ரோஜா இதழ்கள்


சாதாரணப் பின்னணியிலிருந்து எழும்பும் பெண்மணி, பொது வாழ்வில் வெற்றிபெற முடிவதில்லை. இங்கே ஒரு பெண்ணின் திறமை, அறிவு, செயல்திறன் எல்லாவற்றையும் பாழாக்க ஒரு சிறு அவதூறு போதும். ஒன்றுமில்லை. உன் கடந்த காலக் கரும்புள்ளி, எந்த சமயத்திலும் விசுவரூபம் எடுத்து உன் பொது வாழ்வைப் பாழாக்க முடியும். அவதூறு, எதிர்ப்புக்களை எதிர்த்து எழும்ப முடியாத நொய்ம்மை உன்னை விட்டுப் போய்விட்டதாக நான் கருதவில்லை. அதுசரி, தனராஜை விட்டு நீ ஏன் வந்தாய் ?”

ஆழ்குளத்தில் கைவிட்டு அடியில் கிடக்கும் வேரை எடுத்துப் போடுகிறாள் ஞானம்.

“ஏன் வந்தேன்? ஏன் ? .... அம்மணியம்மாதான் குடும் பத்தில் போய்ச் சேர்ந்துகொள். இது வேண்டாம் என்றாள்.” எத்தனை ஆண்டுகளாகவோ வளர்த்த பந்தங்களை உதறிக் கொண்டு பத்து நாட்கள் ஆசைகாட்டியவனுடன் சென்றவள், ஒரே வார்த்தையில் எப்படி வந்தாள்?

ஏதோ பூனை துரத்திக் கொண்டு வந்தாற்போல் ஓடி வந்தாள். பிறகு எத்தனையோ துன்பங்கள் நேர்ந்தபோ தெல்லாம்கூட, அங்கிருந்து ஓடி வந்தது தவறு என்றோ, திரும்ப ஓடிவிடலாம் என்றோ தோன்றவில்லை. அம்மணி அப்படி என்ன பயங்கர உண்மையைச் சொல்லி வைத்தாள்? அவர்களெல்லாரும் கீழ்த்தரமான ஒழுக்கம் உடைய வர்கள் என்றாள். ஒழுங்கங்கெட்டு வாழவேண்டிவரும் என்ற ஊகத்தையே (உண்மை என்று நம்பி) கேட்டு அஞ்சி ஓடி வந்தாள்.

தன்னுடைய கற்பு என்ற ஒன்றுக்கு ஆபத்து நேராது என்ற பத்திரமான இடத்தை நாடி அவள் வந்திருக்கிறாள். “அப்போதைய நிலை வேறு அக்கா. இப்போது எனக்குத் தன்னம்பிக்கை இருக்கிறது.”

“என்ன தன்னம்பிக்கை? உன் கல்வி, தானாக நின்று சம்பாதிக்க முடியும் என்ற பிறரை எதிர்பாராத தன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/260&oldid=1100266" இலிருந்து மீள்விக்கப்பட்டது