பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

259

இதெல்லாம் வேறு. எதையேனும் ஒன்றைப் பற்றிக் கொள்ளாமல் சில சந்தர்ப்பங்களை வெல்லமுடியாது. இந்த தசை உடலின் இயல்பு வேட்கை. அது எனக்குக் கிடையவே கிடையாது என்று சொல்லிவிட்டுத் திரை மறைவில் அதற்கு இனாயாகும் சந்தர்ப்பங்களை வெல்ல முடியாமல் தோற்றுப் போவது சரியல்ல. கானகத்திலிருந்த முனிவர்களே இதற்குத் தப்பிவிடவில்லை. எனவே, நீ உன் கடந்தகாலப் புள்ளியை அழித்துவிட்டதாகக் கருதும் பட்சத்தில் ஏன் மணவாழ்வில் ஈடுபடக்கூடாது? இந்த நாளில் நீ சங்கம் சேர்த்துக் கொண்டு சேரிக் குழந்தைகளை ஒருநாள் குளிப்பாட்டி, பால் வழங்கிச் செய்யும் சேவையைவிட, ஒரு குடும்பத்தில் ஒத்து வாழ்ந்து உன் அறிவையும் திறனையும் ஒரு நல்ல இல்லத்துக்குப் பயன்படுத்தி அதனால் சமுதாய நல மேம்பாடு காண்பது மேல் என்பது என் கருத்து. இந்த நிலையில் நீ கிராமத்துக்குச் சென்று மாமியார் மருமகள் சண்டையைத் தீர்க்கவோ, குடும்பக்கட்டுப்பாட்டு யோசனை சொல்லவோ போனால் ஒருத்தி மதிக்கமாட்டாள். கிராமசேவிகாக்களைப் பற்றிக் கத்தை கத்தையாக எழுதலாம். நீ இருந்த இல்லத்தில் வந்து அறவழியைப் பற்றிப் பேச எனக்குக் கூந்தல் நரைக்க வேண்டியிருந்தது. இவ, மிஸ்ஸா, மிஸஸ்ஸா ? என்றுதான் முதலில் தெரிந்துகொள்ள விரும்புவார்கள். மிஸ் என்றால் அவள்மீது எப்போது அவதூறை வீசி எறியலாம் என்று காத்திருக்கிறது நம் சமுதாயம். காரணம் என்னவெனில் ஒழுக்க அளவு கோலை அவ்வளவு கூர்மையாக, துல்லியமாக வைத்திருக்கிறது. மிஸ் என்பதே ஒரு கிளாமர். (கிளாமர் என்றால் யார் வேண்டுமானாலும் எந்த எண்ணத்தோடு வேண்டு மானாலும் உன்னை அணுகி என்ன வேண்டுமானாலும் பேசச் சுதந்திரம் நீ கொடுப்பதாகப் பொருள்) நீ அழகாக இருக்கிறாய். மேடையேறிப் பேசினால் நிறையக் கூட்டம் வரும் என்ற நோக்கு உனக்கு இசைவாகப்படுகிறதா?” என்று கேட்கிறாள் ஞானம்.

மைத்ரேயிக்கு அவள் எண்ணங்கள் ஒத்துப் போகக் கூடியவையாக இல்லை. மாம்பிஞ்சின் துவர்ப்பைப்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/261&oldid=1100282" இலிருந்து மீள்விக்கப்பட்டது