பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

ரோஜா இதழ்கள்

பாராட்டிக்கொண்டு வீட்டினுள் பதுங்கியிருப்பதில்லை. சோறு தூக்குவதும் வீட்டு வேலை செய்வதும் முச்சந்தியில் ஆப்பம் போட்டு விற்பதும் அவர்களுக்குக் கெளரவக் குறை வல்ல. இம்மாதிரியான கூட்டத்தில் மதுரத்தைப் போன்ற பெண் ஒருத்திசுட இல்லை. மதுரம்மாமி வயிறு பிழைக்க, முடியை எடுக்கவேண்டி இருந்தது. வறுமையின் அடித் தளத்தில் உழன்றாலும் வாழ்வு முறையில் ஒரு போலியான கெளரவம் பாராட்டுவதைப் பெரிதாக நினைக்கின்றனர். ஆனால், அதே பொருள் தேவைக்குமேல் வரும்போது தேவைகளை மிகுதியாக்கிக் கொள்ள வாழ்வு முறையையே மாற்றிக் கொள்ள இந்த உயர்குடி மக்கள் தயங்கவில்லை.

பஸ் கண்டக்டர் அவளருகில் வந்து அந்தப் பூக்காரப் பெண்களிடம் சில்லறை வாங்குகிறான். ஆனால் அவள் சில்லறையுடன் காத்திருந்தும் அவன் சீட்டுக் கொடுக்க வில்லை. அவளாகவே ‘டிக்கெட்’என்று கேட்கும்போது, அவன் அலட்சியமாக மேலே செல்கிறான். அப்போதுதான் முரளி அவளுக்கும் சேர்த்து வாங்கியது புரிகிறது.

அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் எதற்காக அவளுக்குச் சீட்டு வாங்கவேண்டும்? ஒரு பெண்ணை விடத்தான் உயர்ந்தவன் என்ற உணர்வு எல்லா ஆண்களுக்கும் எப்போதும் இருக்கும் போலும்! இந்தக் கண்டக்டர் அவளை நன்றாக அறிந்தவன், ஒரு மாதிரிச் சிரித்துக்கொண்டு அவளுக்குப் பதில் சொல்லாமலே செல் கிறான். அதிகப் பிரசங்கித்தனம் என்று மைத்ரேயிக்குக் கோபம் வருகிறது. பஸ்ஸிலிருந்து அவள் இறங்குவதைப் பார்த்துவிட்டு அவனும் இறங்குகிறான். நடைபாதையில் நடக்கும்போது அவள் முன்னதாக விடுவிடென்று நடக்கிறாள். அவன் நிதானமாகவே பின் தொடர்கிறான். ‘ஆர்ட்காலரி’ வாயிலில் அவள் நுழையும்போது அவனும் வருகிறான். இதமான வெய் யிலும் அமைதியான சூழலும் பசுமை விரிக்கும் புற்றரையும் அவளுடைய அமைதியின்மைக்கு ஆறுதலளிக்கின்றன.

“இந்த இடம் உண்மையாக வெளியிலுள்ள பரபரப்புக்கு மாற்றாக இருக்கிறது. புற்றரையில் இப்படி உட்காரலாமா?...” என்று கேட்கிறான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/266&oldid=1100304" இலிருந்து மீள்விக்கப்பட்டது