பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

265


அவள் நெற்றி வியர்வையைத் துடைத்து இறுக்கத்தைச் சமாளித்துக் கொண்டு மெள்ளச் சிரிக்கிறாள்.

இருவரும் அமருகின்றனர். பேச்சை எப்படித் தொடங்குவது என்று புரியாதுபோல் மெளனமாக இருக்கின்றனர்.

“...நேற்று நான் அங்கே வந்தது. நீங்கள் ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.”

“ராமசேஷன் சொன்னாராம். நல்ல பையன், நல்ல பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு அழைத்து வருகிறேன் என்றாராம். அந்த நல்ல பையனுக்குப் பெற்றவர் இருக்கையில்இவர் எதற்கு முந்திரிக்கொட்டையாக வருகிறார் என்று நினைத்தேன்.” அவன் சிரிக்கவில்லை. “பெற்றவர்கள் இனிமேல் அவன் வாழ்க்கையில் தலையிடமாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும். ஏனென்றால், அவன் அவர்கள் பார்த்து, சீர், வரதட்சிணை வகையறாவெல்லாம் வாங்கிக் கொண்டு கலியாணம் செய்துவைத்த பணக்காரப் பெண், அவனுடன் நான்கு நாள் கூட வாழவில்லை. அவனை நிராகரித்து, மணவிலக்கே வாங்கிக்கொண்டு அமெரிக்காவுக்குப் படிக்கப் போய்விட்டாள் என்று தெரியும்...”

“ஓ..? அதானே பார்த்தேன்...?” என்று மைத்ரேயி கலகல வென்று சிரிக்கிறாள். சிரிப்பு பெரிதாக வலுக்கிறது.

“அதனால்தானா? அதே மட்டத்தில் இருப்பவள் தேவலை என்று நினைத்திருப்பீர்கள்...”

கேலியும் கிண்டலும் சிரிப்புமாக அவள் மொழிந்தது அவனுடைய மனசை நோகச் செய்கிறது என்பதை மைத்ரேயி அவன் முகத்தைப் பார்த்து உடனே புரிந்துகொள்கிறாள்.

“அதில் என்ன தவறு, மைத்ரேயி? ஒரு பிரும்மசாரி வாழ்வைத் துய்மையாக வாழ்வேன் என்று சொல்லமுடியாத உண்மையை ஒப்புக்கொள்வது தவறா? எனக்கிசைந்த பெண்ணை மணக்க விரும்பக் கூடாதா? உங்களை நான் கட்டுப்படுத்தவில்லை; வற்புறுத்தவில்லை. உங்கள் முன் ஒரு ஆலோசனையை வைக்கிறேன். நீங்கள் அதைப் பரிசீலனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/267&oldid=1100308" இலிருந்து மீள்விக்கப்பட்டது