பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/269

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

267

நிர்வாணமாகத் தெரிந்துகொள்ளு முன்பு, அக அளவில் வேடங்களைக் களைந்துவிடும்போது அந்தப் பிணைப்பு பரிசுத்தமாகத்தான் இருக்க முடியும் என்பதை மைத்ரேயி புதிய அனுபவமாக உணருகிறாள். முரளியிடமிருந்து இத்தகைய வெட்ட வெளிச்சமான பேச்சை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘முன்பே எனக்கு உன் வடிவம் உள்ளத்தில் பதிந்துவிட்டது, காதல், ஊதல்’ என்று ஏதேனும் பிதற்றுவான் என்றே அவள் எதிர்பார்த்திருந்தாள்.

இப்போது தன்னைப்பற்றி, ஞானம்மாளிடம் ஒருநாள் கூறியதுபோல், தன் வாழ்க்கை அத்தியாயங்களை ஒளியாமலே அவனிடம் கூறவேண்டியது அவசியமாகத் தோன்றுகிறது.

தான் தன் பிறந்த வீட்டில் வயசு வருவதற்கு முன்னே வயது வந்த பெண்ணாக ஒரு ஆணின் கண்களில் பட்டாலே குடிமுழுகிப் போகும் என்ற அச்சத்தில் வளர்ந்து துணிந்து காதல் கொண்டு தனராஜின் ஆசை வலையில் வீழ்ந்து நாலு மாசம் வாழ்க்கை நடத்தியதையும், கட்சிப் பாசறையில் தங்கிய போது அம்மணி அம்மாள், அவர்களுடைய ஒழுக்க சீலையைக் கிழித்து உள் நடப்பைக் காட்டியதும் அஞ்சி ஓடி வந்து விடுதியில் அடைக்கலம் புகுந்து, பின்னர் ஞானம்மாவின் சோதரியாக மறுமலர்ச்சி பெற்ற விவரங்கள் அனைத்தையும் தெரிவிக்கிறாள். பதினொன்றரை மணியளவில் சந்திக்க வந்த அவர்களுக்குப் பிற்பகல் மணி இரண்டடித்ததுகூடத் தெரியவில்லை.

“காதல் ஊதல் என்பதிலெல்லாம் எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை கிடையாது. உடலளவில் உள்ள ஓர் வேட்கைக்குப் பூப்போட்ட போர்வை போடும் சொல் அது என்பது என் கருத்து. ஆனாலும் இன்னொருவரை மணந்து கொண்டு வாழ்க்கை நடத்துவதைப்பற்றி என்னால் எண்ணிப் பார்க்கக் கூட இயலவில்லை. ஏற்கனவே கறைபட்டுவிட்ட என் வாழ்வில் திருமணம் என்று ஒரு சந்தர்ப்பம் வரும் என்பதை நான் கனவில் கூட நினைத்ததில்லை. அதனாலேயே ‘சமுதாய சீர்திருத்தம், அடிநிலை மக்களின் பிரச்சனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/269&oldid=1123764" இலிருந்து மீள்விக்கப்பட்டது