பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

ரோஜா இதழ்கள்

ரோஜா இதழ்கள் லோகாவை இளைஞர் மன்ற காந்தி ஜெயந்தி விழாவில் கூடப் பார்த்தாள்.

அருகில் பார்க்கும்போது, மிகவும் தளர்ந்திருப்பது தெரிகிறது.

அம்மை வடுவுடன் ஒரு இளைஞன் உட்கார்ந்திருக்கிறான். விரல்களில்வயிரமும் பச்சையுமாக மோதிரங்கள் ஒளி வீசுகின்றன. மடிப்புக் கலையாத சட்டையும் அங்கவஸ்திரமும் தரித்திருக்கிறான். அவள் அறையில் நுழையும்போதே அவன் கைகுவித்து “நமஸ்காரம்மா!” என்று கூறுவதை அவள் கவனிக்காமலில்லை.

“என்னம்மா மைத்ரேயி?” என்று மொட்டைத் தலையர் தன் பொய்ப் பற்களை காட்டுகிறார்.

இவர்களெல்லாரும் எதற்கு இங்கு வந்திருக்கிறார்கள் என்று மலைத்தாற்போல் நிற்கிறாள் மைத்ரேயி.

லோகா அவளை, “உட்கார்... ஏன் நிற்கறே?” என்று கூறும்போதும் அந்த மலைப்பு நீங்கவில்லை.

“இப்ப உன்னைப் பார்க்கணும்னுதான் வந்திருக்கோம். நாளைமூணாம் நாள் இவா ஊரில் ராஜாஜி பர்த் டே செலிப்ரேட் பண்றா. அதில் நீ வந்து பேசணும்; பங்கெடுக்கணும்... என்று லோகா மர்மத்தை உடைக்கிறாள். அவளுடைய பேச்சின் ஒலி ‘நான் வாழ்வு கொடுத்து நீ வந்தவள்’ என்று கட்டளை இடுவது போலிருக்கிறது.

மைத்ரேயியின் குரல் தெளிவில்லாமல் ஒலிக்கிறது. “பொலிடிகல் மீடிங் மாதிரியா ஸிஸ்டர்?”

“ஏன்? பொலிடிகல்னா வரமாட்டியா?” என்று மெள்ளச் சிரிக்கிறாள் லோகா.

“நீ சின்ன வயசு. உன்னைப் போல இருக்கிறவாள்ளாம் இப்ப பாலிடிக்ஸில் புகுந்து வரத்தான் வேணும்” என்று உறுதியாகக் கூறுகிறார் மொட்டைத்தலை.

“ஆமாம்மா, எங்க திருச்சின்னபுரம் தொகுதி சுதந்திரக் கட்சி பிரஸிடென்ட் என்ற முறையில் உங்களைக் கூப்பிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/274&oldid=1101331" இலிருந்து மீள்விக்கப்பட்டது