பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

ரோஜா இதழ்கள்

மைத்ரேயிக்குக் கூட்டுச் சேரலின் மர்மம் இப்போது தான் புரிகிறது. அவர்களைச் சார்ந்து இந்த ‘கம்யூனிடீ’, இந்தச் சமூகம் வெற்றி தேடிக்கொள்ள முயல்கிறது. யாரையேனும் சார்ந்து எப்படியேனும் இடங்களைப் பிடிக்க வேண்டும்.

மைத்ரேயி தான் ஒரு பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டாற் போல் உணருகிறாள்.

ராஜா அவளை வற்புறுத்தவில்லை, வரவேற்றார்.

இவர்கள் தீர்மானத்துடன் வந்திருக்கின்றனர்.

லோகா அவளை விரலைக் காட்டி ஆணையிடலாம் என்று நினைக்கிறாள்!

அம்மைவடு ஆசாமி நன்றாக முகஸ்துதி செய்யத் தெரியும் என்று நிரூபிக்கிறான்.

“பளிச்சினு சொல்றேனம்மா, எங்க தொகுதியில் உங்களை நிற்கவைக்கும் எண்ணம் எனக்கு உண்டு. உங்களுக்காகக் கூட்டுக் கட்சிகள் எல்லாம் வேலை செய்யும். பெரும்பான்மையும் மிடில் கிளாஸ் பிராமணர் வோட்டுகள். ஸ்லம் கொஞ்சம்...”

“என்னையா தேர்தலுக்கு நிற்கச் சொல்கிறீர்கள்?” “ஆமாம். ஏன்? நீங்கள் எங்கள் தொகுதியில் நின்றால் வோட்டை அள்ளிக்கொண்டு வருவீர்கள். எங்க தொகுதி சுதந்திராக் கோட்டை. ஸ்லம் முழுசும் கறுப்பு சிவப்பு. நமக்குக்கூட்டு. அவ்வளவு பேரும் நமக்கு வேலை செய்வார்கள். பணச்செலவு பற்றி நீங்கள் கவலையே படவேண்டாம்.”

ஞானம், மைத்ரேயியின் இந்த நிலையை அநுபவிப்பவள் போல் மேசையின்மீது விரல்களால் தாளம் போடுகிறாள்.

“நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்தான். ஆனால் என்னை ரொம்ப மன்னிச்சுக்கணும் ஸிஸ்டர். எனக்குச் சரிவரும்னு தோணல...’

“நீ என்ன இவ்வளவு பயப்படறே, உனக்கே தெரியும். இத்தனை வருஷ காங்கிரஸ் ஆட்சியில் இன்னிக்கு ஜனங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/276&oldid=1101335" இலிருந்து மீள்விக்கப்பட்டது