பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

ரோஜா இதழ்கள்

::“வரோம்...”

அவர்கள் விடைபெற்றுக் கொண்டு எழுந்திருக்கின்றனர்.

கையிலிருக்கும் தாள்களை வெறித்துப் பார்க்கிறாள் மைத்ரேயி.

“உங்களால்தான்! எதற்காக அவர்களை உட்காத்தி வைத்தீர்கள்?” என்று பொய்க் கோபம் கொண்டு சாடுகிறாள் ஞானத்தை.

“நானா உட்காருங்கள், மைத்ரேயியைப் பார்த்துவிட்டுப் போங்கள் என்றேன்? லோகா ஆஃபீஸுக்குத் தேடிக் கொண்டு வந்து விட்டாள். அவர்களை நான் கழுத்தைப் பிடித்துத்தள்ளுவதா?”

“அதுசரி, அவர்கள் தேர்தல் அது இது என்றெல்லாம் கொக்கி போடும்போது நீங்கள் ஏன் இடித்த புளிபோல் உட்கார்ந்திருந்தீர்களாம்!”

“நான் வேறென்ன செய்வதாம்?” “நான் உங்கள் சொந்தத் தங்கையாக இருந்தால் இப்படி உட்கார்ந்திருப்பீர்களா?”

“நிச்சயமாக உட்கார்ந்துதானிருப்பேன். உன் சுதந்திரத்தில் நான் ஏன் குறுக்கிடவேண்டும்? உனக்குத்தான் இந்த கட்சியில் நம்பிக்கை இருக்கிறதே?”

“உங்கள் கருத்து என்ன சொல்லுங்கள் அக்கா, இந்த தடவை காங்கிரஸ் விழுந்துவிடுமா?”

“அதென்னமோ, என்னால் சொல்ல முடியாது. ஆனால் இந்தப் பிராமணர் கட்சி நிச்சயமாக வராது.”

“ஏன் இப்படிச் சாபம் கொடுக்கிறீர்கள், அக்கா?” “எலக்க்ஷன் ஒரு சர்க்கஸ். நான் அநுபவத்தில் சொல்லுகிறேன்.”

“காங்கிரஸை எதிர்க்கும் சோஷலிஸ்டுகள் எல்லோரும் தோற்றாலும் நான் வெற்றி பெறுவேன் என்று என் கட்சி நினைத்தது. இளம் வயசு, பெண் என்ற கிளாமர், பேச்சுத் திறன் இவற்றை எல்லாம் தராசுத் தட்டின் கனத்தைக் கூட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/278&oldid=1101339" இலிருந்து மீள்விக்கப்பட்டது