பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

ரோஜா இதழ்கள்

“வேறு நான் சொல்லும் யோசனைதான் உனக்குப் பிடிக்கலியே ?”

“என்ன யோசனை ?”

“முரளி உன்னிடம் என்ன பேசினான் ?”

“உங்களுக்கு எப்படித் தெரிந்தது? “ நீ லைப்ரரி புத்தகத்தை மடியில் போட்டுக்கொண்டு மூன்று மணிநேரம் பகற்கனவு கண்டால் இரண்டும் இரண்டும் நாலு என்று புரிந்துகொள்ளக் கஷ்டமா ?”

“எனக்கு மனசு ஒப்பவில்லை அக்கா. ஒருதரம் என் மீது பட்ட கறையைக் கையால் துடைப்பதுபோல் துடைத்துவிட்டு இன்னொருதரம் இன்னொருவருடன் வாழ்க்கையில் பங்கு கொள்ள முடியுமென்று தோன்றவில்லை. அப்படி முடியாமலிருப்பதை மறந்து நிம்மதியாகவுமில்லை.”

“ஏன்? உன்னை யாரும் வற்புறுத்தவில்லையே? அது சரி, ரொட்டியைக் காய்ச்சித் தருகிறேன். சாப்பிட்டுவிட்டுப் பாலைக் குடித்துவிட்டு, பேச்சுக்குத் தயார் செய்துகொள்...” என்று கூறிவிட்டு ஞானம் உள்ளே செல்கிறாள். வெற்றிலைப் பட்டியைக் கையில் வைத்துத் திருப்பிப் பார்த்துக்கொண்டே வாய்திறவாது அமர்ந்திருக்கிறாள் மைத்ரேயி.


18

ஞானம்மாளுடன் முதன்முதலில் பஸ்ஸில் வந்த பிரயாணத்தை நினைத்துக்கொண்டு சீனிவாசனுடன் காரில் பிரயாணம் செய்கிறாள் மைத்ரேயி. அன்று மனம் வண்ணச் சிறகுகள் கொண்டு வானில் திரியும் மகிழ்ச்சியில் திளைத்தது. இன்றோ சிறகுகள் இரண்டிலும் கற்களைக் கட்டிவிட்டாற்போல் இருக்கிறது. அவள் ஞானம்மாளுடன் வராமலிருந் திருந்தால் இந்தக் கார் சவாரி கிடைத்திருக்குமா? முரளி அவளைக் கல்யாணம் செய்துகொள்ள முன் வருவானோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/282&oldid=1101347" இலிருந்து மீள்விக்கப்பட்டது