பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

ரோஜா இதழ்கள்

கும் வரிசைகள். உண்மையில் அன்றாடம் மூச்சு முட்டும் வேகத்தில் நகரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள், இம்மாதிரியான எதுகை மோனை வசைகளைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை. ஒரு வகையில், சொல்லப் போனால் நகரில் தனித்துவம் என்பதே அழிந்துபோய், அவ்வப்போது அலைபோல் தோன்றும் ஒரு கூட்ட உணர்ச்சிக்கு அடிமையாய் மக்கள் இயங்குகின்றனர். சில சாதியினர் தனித்துவம் அழிந்துவிடக் கூடாதென்று கட்டுக் கோப்பாய்க் கருத்துான்றி தங்கள் பழமைக் கட்டுப்பாடுகளைக் காத்து வருகின்றனர். உயர் சாதியோ, தனித்துவம் மோதி நசுங்கி உருமாற, மூச்சுக்குப் பிதுங்கும் நிலையில் ஆத்மா அழிய உடற்கூடு மட்டும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அறியாமை நிறைந்த கிராமப்புறங்களில், இரண்டுங்கெட்ட நிலையில் உள்ள குடியிருப்புக்களில் எதுகை மோனைப் பேச்சுக்கள் உணர்ச்சியைக் கிளர்த்துகின்றன.

ஆட்சிமுறை அலுவலகங்களில் இந்தி மொழி வருவதனால் அத்தகைய அலுவலகங்களில் பணிபுரியும் வெள்ளைக் காலர் சிப்பந்திகள் அல்லவோ கவலைப்பட வேண்டும்? ஆனால் அந்த வெள்ளைக்காலர் சிப்பந்திகளால் இப்படி எதிர்ப்புக்காட்ட வரையறையை அறுத்துக்கொண்டு ஒட முடியாது. அதனால், இந்தி என்றால் என்ன என்று புரியாத ஒரு பாமரன், தன் வாழ்வுக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் தேவையில்லாத ஒரு கிராமத்தான் அதைப் பயிரை அழிக்கவரும் ஒரு பூச்சிப் படையை ஒழிக்கக் கிளம்புவதைப் போல் எதிர்த்துக் கிளம்பினான். விதை நெல்லாய்ப் பாதுகாக்கப்பட வேண்டிய மாணவ சமுதாயமும் சாதி, இனம் என்ற அடிப்படையில் வெறுக்கக் கற்று தேவநாகரி எழுத்தையே சாபக்கேடாகக் கருதி உணர்ச்சிமயமாக மாறி இருக்கின்றனர். இந்த இளைஞருக்கெல்லாம் எதிர் காலத்தைப் பற்றிய விசாலமான சிந்தனை ஏது?

அவள் பிறந்த சமுதாயத்திற்பட்டவர், ஆங்கிலேயன் நாட்டை ஆளவந்ததும் அம்மொழியில் தேர்ச்சி பெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/288&oldid=1100467" இலிருந்து மீள்விக்கப்பட்டது