பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

ரோஜா இதழ்கள்

பற்றிய சிறப்புக்களையும் பெருமைகளையும் குறித்துக் கொண்டு வந்திருக்கிறாள். எனினும் பேசப் பொருந்தவில்லை. அந்தப் பெரியவரை அவள் ஒருதரம் பார்த்துப் பேசியதுகூட இல்லை. அவரைப் பற்றிப் பேசவோ, புகழவோ தனக்கு ஒரு தகுதியும் இல்லை என்பதை அப்போதே உணருகிறாள். தனக்குப் பேசுவதற்குச் சந்தர்ப்பம் அளித்ததற்குச் சம்பிரதாய நன்றி கூறும் பொழுதில், ஒரு பெரிய ரோஜாமாலையைக் கொண்டு வந்து ஒரு சிறுமி போடுகிறாள். கைதட்டும் ஒலியும் மலரின் குளிர்ந்த தீண்டலும் அவளுக்கு நிலைக்கும் உறுதி யைக் கலைத்துவிட்டாற் போலிருக்கிறது.

ஓர்கணம் ஒன்றும் புரியவில்லை. அவள் பேசவேண்டிய புகழ் மொழிகள் நழுவிப்போகின்றன. வேறு விஷயங்கள் தங்கு தடையின்றி வருகின்றன. ஒரு குடியரசு நாட்டில் ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஆட்சி பீடத்தை அணி செய்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இருக்கிறது. அரசியல் உணர்வு என்பது மேடை ஏறிப் பேசத் தெரிந்திருப்பதோ, மக்களைக் கவரும் வகையில் சுலோகம் எழுதுவதோ அல்ல; அவரவர் நாடு நம்நாடு என்ற பொறுப்போடு தத்தமக்குரிய பணியைச் செவ்வனே ஆற்றும் போதுதான் தத்தம் கடைமையைச் செய்தவராகின்றனர். ‘கடைத் தேறும்வரை’ என்ற நூலைப் படித்து காந்தியடிகள் கண்ட கனவையும் இன்றைய நிலையையும் எடுத்துக்கூறி, மக்களின் உண்மைப் பொறுப்பை வலியுறுத்துகிறாள். அரசமானியம், முதலாளித்துவத்தைச் சாதகமாக்குதல் போன்ற விஷயங்களைத் தொடாமல், முதுபெரும் தலைவரின் பிறந்தநாள் விழாவில், தார்மீகக் கோப்புச் சிதையாமல் நாட்டை நடத்த அவர் கூறும் அரிய கருத்துக்களை வரவேற்றுச் செவிமடுப்போம் என்று உறுதி கொள்ளும்படி கூறி முடிக்கிறாள்.

கையொலி காதைப் பிளக்கிறது; அவள் அமர்ந்த பின்னரும் இன்னமும் மிகவும் உற்சாகத்தோடு அந்த ஒலி வலுவடைவதன் காரணத்தை அறிய இயலாமல் கூட்டம் ஒன்று மேடையை நோக்கி வருகிறது. கையொலி நீடித்ததற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/294&oldid=1101362" இலிருந்து மீள்விக்கப்பட்டது