பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

293

வருபவர்களே காரணம் என்று புரிந்துகொள்ளுமுன், அவள் திடுக்கிட்டாற்போல் பார்க்கிறாள்.

சந்தேகமில்லை. மேல்நோக்கி வாரி விடப்பட்ட கிராப்பு, பூச்சி மீசை, சிரிப்பு. சிவப்பு கறுப்புக் கரைத்துண்டு.

நல்ல சந்தனச் சிவப்பு நிறத்தில் உயரமாகக் கண்ணாடி போட்டுக் கொண்டு கால்சட்டை அணிந்த முதியவர் ஒருவரும் உடன் வருகிறார்.

பதவியில் இருந்த நாள் வரையில் சலுகைகளைப் பெற்று ஓய்வு பெற்றபின் எதிர்க் கட்சியில் நிற்கும் முன்னாள் ஐ.ஸி.எஸ். காரர். வெங்கிடாசலம். “வணக்கம் வணக்கம்...” என்று திரும்பிய இடங்களிலெல்லாம் தனராஜ் கை குவிக்கின்றான். மைத்ரேயி மறுவணக்கம் கூறவோ, சிரிக்கவோ இயலாதவளாக உறைந்து போனாற்போல் நிற்கிறாள். சீனிவாசன் ஒரே பரபரப்பும் உற்சாகமுமாக ஒலிபெருக்கி யைப் பற்றிக்கொண்டு அறிவிக்கிறான்.

“பெரியோர்களே, தாய்மார்களே, இப்போது முன்னாள் பெரிய பதவி வகித்து அரசின் ஊழல்களை எல்லாம் அம்பல மாக்கி வரும் திரு வெங்கிடாசலம் ஐ.ஸி.எஸ் அவர்களுடன், பாடலரசு தனராஜ் அவர்களும் வந்துள்ளார்கள். அவர்கள் இருவரும் சிறப்புரை ஆற்றுவார்கள்.”

வெங்கிடாசலம் ஐ.ஸி.எஸ்.ஸு-க்குத் தாய்மொழியிலும் பேசத் தெரியாது; தமிழிலும் பேசத் தெரியாது. எனினும், முன்னுரையாகச் சில சொற்களை மட்டும் நன்றாகப் பேசக்கற்றிருக்கிறார் என்பது தெரியவருகிறது. “அன்பர்களே, இந்த அவையின்கண் என்னை அழைத்துச் சிறப்பித்ததற்காக முதற்கண் எம் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்ற முன்னுரைக்குப் பின், அவருடைய சொற்கள் மும் மொழிகளிலும் கலந்து விளையாடி, எல்லோருக்கும் நகைச் சுவை விருந்தளிக்கிறது. இடை இடையே அருகிலுள்ள சீனிவாசனிடம் குனிந்து ஏதோ கேட்டுக் கொள்கிறார்.

“இன்னிக்கு, விசேஷமா, ஒரு ஸ்திரி...அல்ல, லேடி ஸ்பீக்கர், பிரமாதமாப் பேசியிருக்கான்னு தெரியறது. இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/295&oldid=1100899" இலிருந்து மீள்விக்கப்பட்டது