பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

ரோஜா இதழ்கள்

மாதிரி யங்ஸ்டர்ஸ் அவசியம் முன்னுக்கு வரணும். இப்ப பாலிடிக்ஸ் ஸ்டாக்னண்டாக இருக்கு. இதுக்கு இனிமே ந்யூ ப்ளட் கொடுக்கணும். அவா...மிஸ் மைத்ரேயி எம்.ஏ. ஸ்டுடன்ட்னு தெரியறது. ஐ கங்கிராச்சுலேட் ஹர் ஃபார் ஹர் ஸ்பீச்....”

சந்தான கிருஷ்ணமாச்சாரியாரும் தனராஜூம் ஏதோ பேசிச் சிரிக்கின்றனர்.

வெங்கிடாசலம் முடித்த பின்னர், தனராஜ் எழுந்திருக்கிறான். வழக்கமான கட்டைத் தொண்டையில் மொழி ஒன்றையொன்று தொட்டு அடுக்கு ரயில் விளையாட்டு விளையாடுகிறது. என்ன தானிருந்தாலும் எந்தக் காங்கிரஸ் காரனுக்கும் இப்படிப் பேச வருகிறதா?

“கன்னித் தமிழின் தொன்மையிருக்க, நேற்றுப் புகுந்த அரக்க இந்தி, கள்ளத்தனமாய் பூதகி வேடம் பூண்டு வரு கிறது. விடுவோமா? மூச்சுப் போனாலும் பேச்சுப் போகாமல் போராடுவதே எம் இலட்சியம்” என்று இலட்சியத்தை விளக்குகிறான். “அந்த லட்சியம் ஈடேற மூதறிஞர் அவர்களுக்கு நல்லாசிகூறி ஆதரவளிக்கிறார். அவர் பல்லாண்டு வாழவேண்டும். காங்கிரஸ் பதினேழாண்டு ஆட்சியில் மக்களைப் படியரிசிக்குத் திண்டாட வைக்கத்தான் திட்டம் தீட்டியது. அவர்கள் ரூபாய்க்கு மூன்று படி அள்ளிக் கொடுத்து மக்களை வாழவைப்பார்கள். விண்மீனும் இளம் பரிதியும் வானுக்குச் சொந்தம். அவை கூட்டாகி விண்ணை மண்ணுக்குக் கொண்டுவரும். இரட்டைக்காளை உழைத்து ஓய்ந்து சண்டிகளாகிவிட்டன. இனி அவை கசாப்புக் காரனுக்குத் தான் லாயக்கு...”

அவனுடைய கட்டைக் குரல் ஒலி வடிவங்களில் புகுந்து விளையாடும்போது, மக்கள் அடிக்கடி சிரிக்கிறார்கள். கையும் தட்டுகிறார்கள். கையொலிக்கும் சிரிப்புக்கும் பொருளே இல்லை!

அந்த இருவரையும் நிச்சயமாக எதிர்பார்த்திருக்க வில்லையாதலால் சீனிவாசன் மாலைகள் வாங்கி வைத்தி ருக்கவில்லை போலும்! விரைந்து ஆளனுப்பி இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/296&oldid=1101364" இலிருந்து மீள்விக்கப்பட்டது