பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

ரோஜா இதழ்கள்

“என்னையா கூப்பிட்டீங்க ?”

“வணக்கங்க. உதய ஞாயிறு பத்திரிகை நிருபருங்க. ஒரு பேட்டி...”

பருவப்பெண் படுகொலைச் செய்திகளை முரமுர வென்று சூடாகக் கொடுக்கும் உதயஞாயிறு பத்திரிகைக்கு பேட்டி!

அவள் மெளனநகை செய்கையில் அவன் இன்னொரு படி முன்னதாக வைத்து, “நம்ம வீட்டுக்கு எப்பங்க வரட்டும், பேட்டிக்கு ?” என்று கேட்கையில் அவள் வெட்டுகிறாள்.

“பேட்டி கீட்டி எல்லாம் ஒண்ணும் வாணாம்!”

“அப்படிச் சொல்லக்கூடாதுங்க. சாயங்காலம் சரியாயிருக்குங்களா? நாளைக்கு ஏழு மணிக்கு..”

“நான் பேட்டி வேண்டான்னேன். அதெல்லாம் பிடிக்காது. நீங்கள் போகலாம்.”

“பேட்டி கொடுத்தா என்னங்க ? ஞாயிறு மலர்ல ஃபோட்டோ போட்டு வெளியிடுவோம்...”

மொட்டைத்தலை பேச்சைக் கேட்டாற்போல் வருகிறார்.

“ஏம்மா ? பப்ளிஸிடிதானே ? பாலிடிக்ஸுக்கு இதெல்லாம் சகஜம் மைத்ரேயி, வாணான்னு சொல்லாதே!”

“அப்ப நாளை ஏழரை மணிக்கு வரலாங்களா?”

“எங்கே வருவீங்க?” என்று திருப்பிக் கேட்கிறாள் அவள்.

“நம்ம வீட்டுக்கு..”

வீடு தெரியுமா என்று கேட்கவில்லை. அவன் உறுதி செய்து கொண்டு மீண்டும் வணக்கம் போட்டுவிட்டுப் போகிறான்.

“எக்ஸ்க்யூஸ்மி, ரொம்ப நேரமாயிடுத்து. ஆத்துக்குப் போகலாமா?” என்று சீனிவாசன் பரபரப்பாக வருகிறான்.

“இப்படிக் கொஞ்சம் வாங்க. அவங்க என்னமோ உதயஞாயிறுக்கு பேட்டி அது இதுன்னு நாளைக்கு எங்க வீட்டுக்கு வரேன்னு போயிருக்காங்க. அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீங்க கடுமையாகக் சொல்லி நிறுத்தணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/298&oldid=1101369" இலிருந்து மீள்விக்கப்பட்டது