பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

297

இவங்க, பேப்பரில் என் பேர் வரவேண்டாம். நான் தேர்தலுக்கு நிற்கப்போகும் ஆளில்லை. வெறும் பேச்சாளி!”

அவளுடைய குரலின் கடுமை அவனுக்கே எதிர் பாராததாக இருக்கிறது.

“அதுக்கென்ன நான் சொல்லிடறேன், இப்ப, சாப்பிடப் போகலாம் வாங்க. சாப்பிட்டானதும் வீட்டில் கொண்டு விட்டுடறேன்...”


19

வீடு திரும்பும்போது பதினோரு மணியாகி விடுகிறது. ஞானம் படுக்கையிலிருந்து வந்து கதவு திறந்துவிட்டுப் படுக்கைக்குப் போய்விடுகிறாள். சீனிவாசனிடம் அவள் மரியாதைக்காகக்கூட ஒரு சொல் பேசவில்லை. மைத்ரேயியிடமும் கூட்டத்தைப் பற்றி ஒரு கேள்வியும் கேட்கவில்லை. மைத்ரேயிக்குத் துயரம் தொண்டையை அடைப்பதுபோல் முட்டிக்கொண்டு வருகிறது. அங்கே நடந்தவைகளை எல்லாம் கிளர்ச்சிப் பரபரப்புடன் கொட்டும் எண்ணத் துடன் அல்லவா வந்திருக்கிறாள்? ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ளாமலே ஞானத்தின் படுக்கையருகில் வந்து நிற்கிறாள்.

“தலைவலியா, அக்கா ?”

“ஆமாம். இவ்வளவு நேரமா கூட்டம் முடிய? போ, போய்ப் படுத்துக்கொள். காலையில் பேசலாம்.”

அவளுடைய குரலில் வழக்கமான கனிவுக்குப் பதில் எரிச்சல் மிகுந்திருக்கிறது.

மைத்ரேயி தன்னறைக்குள் வந்து நாற்காலியில் அமருகிறாள்.

படுக்கையில் படுக்கப் பொருந்தவில்லை. ஒரு மணி வரையிலும் படிக்கலாம் என்றெண்ணுகிறாள். படிப்பும் நிலையில் நிற்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/299&oldid=1115403" இலிருந்து மீள்விக்கப்பட்டது