பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

ரோஜா இதழ்கள்

உள்ளம் கிளர்ச்சி மிகுந்து அன்று நேர்ந்த சந்திப்பைப் பற்றியே நினைக்கிறது.

தனராஜ் எவ்வளவு மரியாதையாக நடந்தான்!

அவன் வேறு மணம் புரிந்து கொண்டிருப்பானாக இருக்கும்.

அந்தக் கட்சியில் இருக்கும் தம்பிகள் எல்லோருமே சுறு சுறுப்பானவர்கள். இந்தக் கட்சியிலோ, வெற்றிலை புகையிலை, வழுக்கை, தொந்தி என்றுதான் தென்பட்டார்களே ஒழிய, இளைஞர்கள் இளைஞர்களாகச் சுறுசுறுப்பாகவேயில்லை. ஒருகால் மீண்டும் மீண்டும் அவள் கட்சிக் கூட்டங்களில் பேசப்போவாளா? தனராஜ் வந்து அழைப்பானோ? அழைத்தால் என்ன தவறு? அவள் தன் திறமையை வளர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களே அவை. அன்றையக் கூட்டத்தில் தெளிவும் கம்பீரமும் பொருள் செறிந்தும் கொண்டொலித்த உரை தன்னுடையதுதான் என்று தனக்குத் தானே கணித்துக் கொள்கையில் பெருமை பூரிக்கிறது. அந்த மினுமினுப்பில் தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறாள். பேச்சாளருக்குத் தகுதிக்குத் தக்க கூலி உண்டு என்பதையும் அவள் இப்போது உணர்ந்து கொண்டிருக்கிறாள். அழகிய மணவாளனுக்குத் தேர்தல் கூட்டங்களில், கால்மணிப் பேச்சுக்கு இருபத்தைந்து ரூபாய் என்று வைத்தியநாதன் அவளிடம் தெரிவித்திருந்தான். உண்மையில் சீனிவாசன் தன் தொகுதி யில் அவளை எந்தவிதமான நிபந்தனையுமின்றி நிற்க வைக்க மாட்டான். அவன்தான் நிற்கப் போகிறான். அவள் பேச்சாளராகவே மாறி, பொருள் தேடலாம். மக்களைக் கவரும் குரல், வடிவம் எல்லாம் அவளுக்கு இருக்கின்றன. அதில் என்ன தவறு?

அவளுடைய சிந்தனைகள் சுற்றிச் சுற்றி வருகின்றன. அவள் அப்படியே உறங்கிப் போகிறாள்.

ஓர் கனவு. அவள் தனராஜின் வீட்டுக்குப் போகிறாள். தட்டி மறைவுக்கு அப்பாலிருந்து ஒரு பெண் சிவப்புச் சேலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/300&oldid=1100049" இலிருந்து மீள்விக்கப்பட்டது